பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 115 உடலில் அவன் சிட்டம் கொண்டு போய்ப் போட்டு வாங்கிக் கொண்டு வந்தளித்த அந்தக் கதர்ப் புடவை அலங்கரித்திருந்தது. பட்டுப் புடவையும், நகைகளும், வைர மூக்குத்தியுமாக இருக்கும் போதும் அவள் அழகு அவனை வசீகரித்தது; கதர்ப் புடவையுடன் வரும் போது அந்த எளிமையிலும் அவள் வசீகரமாயிருந்தாள். இதிலிருந்து அலங்காரம் அவளுக்கு வசீகரத்தை உண்டாக்குகிறதா, அல்லது அலங்காரத்துக்கே அவள் தான் வசீகரத்தை உண்டாக்குகிறாளா என்று பிரித்துப் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. அதுவும் நாலைந்து நாட்களுக்குமேல் அவளைப் பார்க்காமல் இருந்துவிட்டு இப்போது திடீரென்று பார்த்தபோது அந்த வசீகரம் இயல்பைவிடச் சிறிது அதிகமாகித் தெரிவது போல் உணர்ந்தான் அவன்.

ஒன்றும் பேசாமல் காபியை மேஜைமேல் வைத்து விட்டு எதிரே இருக்கும் ஒரு சிலையை வணங்குவதுபோல் அவனை நோக்கிக் கை கூப்பினாள் மதுரம். அவள் கண்கள் நேருக்கு நேர் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்கத் தயங்கின.

'எதிரே இருப்பது மனிதன்தான். மதுரம் ஒரு சிலையைக் கை கூப்புவதுபோல் கூப்பி வணங்குகிறாயே?" -

'என்ன செய்றது? மனிதர்களே சமயா சமயங்களில் சிலையைப் போலாகி விடுகிறார்களே: 'யாரைக் குற்றம் சாட்டுகிறாய்?'

'யார் குற்றமாக எடுத்துக்கிறாங்களோ, அவங்களைத் தான் சொல்றேன்னு வச்சுக்குங்களேன். சிலைக்காவது உடம்பு மட்டும் தான் கல்லாயிருக்கு, சிலையைப் போலா யிடற மனுஷாளுக்கோ மனசும் கல்லாப் போயிடறது.'

காபியைக் குடிக்கலாமே, ஆறிடப் போறது."

"ஆறின்ா என்ன? கல்லுக்குத்தான் சூடு, குளிர்ச்சி ஒண்ணுமே தெரியப் போறதில்லையே? -