பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ஆத்மாவின் ராகங்கள்

நாற்றங்கள் சுற்றிச் சுற்றி வரும். அது தூக்கத்தைக் கெடுத்தது; நோய்களை உண்டாக்கியது.

முப்பது கைதிகளின் குறட்டை, உளறல், கனவு அரற்றல், இருமல், செருமல், இவைகளுக்கிடையே இரவு நரகமாகக் கழிந்து கொண்டிருந்தது. முறையான வார்டர்கள் கடுமையில்

சிறிதும் குறைந்தவர்களில்லை. கைதிகளிலேயே விசுவாசமுள்ள கைதிகளிலிருந்து பொறுக்கி நியமித்த 'கன்விக்ட் வார்டர் யாராவது வந்தால் சில சமயம்

கருணையாக நடந்து கொள்வது உண்டு. கிரிமினல் கைதிகள் பெரும்பாலோர் கூட இருந்ததனால் அவர்களோடு இருந்த பாவத்துக்காகச் சத்தியாக்கிரகிகளுக்கும், கதவைத் திறக்காமலே சந்து வழியே ஆகாரத்தைக் கொடுக்கும் 'ஸபாலிடரி கன்ஃபைன்மென்ட் முறை கடலூரில் கடைப்பிடிக்கப்பட்டது. சில சத்தியாக்கிரகிகள் 'ஸாலிடரி' - கன்ஃபைன்மென்ட் - முறையை எதிர்க்கவும் செய்தனர். ஆனால் பயன் ஒன்றும் உடனே விளையவில்லை.

முதன் முறை அவனைப் பார்க்க வந்ததைப் போலவே பத்தரோ முத்திருளப்பனோ இரண்டு மாதத்துக்கு ஒரு முறை தவறாமல் கடலூருக்கு வந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது ஆறுதல் அளிக்கக் கூடியதாக இருந்தது. தேசத்திற்காக விரும்பி அடைந்த தண்டனை இது என்ற பெருமையோடு கடலூரில் நாட்களை ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிக் கழித்துக் கொண்டிருந்தான் ராஜாராமன். கடலூர் சிறையில் உணவு முறை மிகமிக மோசமாயிருந்ததனால், மூலக் கடுப்பு அடிக்கடி வந்தது. கல்லைவிடக் கடுமையான உண்டைக் கட்டிகள் வழங்கப்பட்டன. சிறை வைத்தியர் உணவைவிட மோசமான மருந்துகளைக் கொடுத்ததனால் வைத்திய உதவியும் பயனளிக்கவில்லை. ஒவ்வொரு திங்கள் கிழமையும் சிறை மைதானத்தில் நடைபெற்ற கைதிகளின் 'பரேட்'டின் போது ஒவ்வொரு கைதியும் தன் குறைகளை அதிகாரியிடம் கூறலாம் என்றிருந்தாலும், அப்படிக்