பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 ஆத்மாவின் ராகங்கள் அவரோடு தங்கியிருந்தபோது, பிருகதீஸ்வரன் வ.வே.சு.

அய்யரின் சேரமாதேவி குருகுலத்தைப்பற்றி நிறையச் சொன்னார்.

'மிக உயர்ந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்ட சேரமாதேவி 'பாரத்வாஜ ஆசிரமம் அபவாதத்துக்கு ஆளாகி மறைந்துவிட்டது. பாரதப் பண்பாட்டிலும், தேச பக்தியிலும் சிறந்த தீரராகிய வ.வே.சு. ஐய்யர், ஊரின் சூழலினாலும் உடனிருந்த சிலரின் தேவையற்ற அளவு கடந்த ஆசாரப் பிடிப்பினாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டதனால், தமிழ்நாட்டிலும் ஒரு ஞானத் தபோவனம் உருவாக முடியாமல் போயிற்று. மறுபடியும் ஒரு பெரிய ஆசிரமம் தோன்ற வேண்டும். சேரமாதேவி குருகுலத்துக்கு ஏற்பட்டது போன்ற அபவாதம் எதுவும் ஏற்பட்டு விடாமல் தெளிவான நோக்கத்துடன் சாதிபேதமற்ற அடிப்படையிலும், தாழ்த்தப்பட்டோர் உயர வழி வகுக்கும் திட்டங்களுடனும், காந்திய இலட்சியங்களுடனும் ஒர் அருமையான குருகுலம் ஆரம்பிக்க வேண்டும். பயிற்சித் திட்டங்களும், சுதேசி மனப்பான்மையை வளர்க்கும் நாட்டுப்புற ஆசிரமவாழ்வும் இல்லாமல் வேகமாக நாட்டைத் திருத்த முடியாது. மனிதர்கள் ஒரே சாதி. அவர்களில் ஏற்றத் தாழ்வு இல்லை என்ற உணர்வைக் கலந்து பழகும் பண்பாடுகளால்தான் நடைமுறைக்குக் கொண்டு வர முடியும்' - என்றார் பிருகதீஸ்வரன். *

அவர் விவரித்துச் சொல்லிய விதத்திலும், எடுத்துக் காட்டிய பழைய 'பால பாரதி' இதழ்களைப் படித்த திலிருந்தும் ஒரு தேசிய சமூக ஞானபீடம் வேண்டும் என்ற ஆசை ராஜாராமனுக்கும் ஏற்பட்டது. அவன் மனத்தின் வித்தூன்றினாற்போல் அழுத்தமாகப் பதியும்படி அந்தக் கருத்தை நன்றாக எடுத்துச் சொல்லியிருந்தார் பிருகதீஸ்வரன்.

"இங்கே புதுக்கோட்டைச் சீமையில் இடமோ, அதற்கு வேண்டிய பொருளுதவியோ எனக்குக் கிடைக்கவில்லை. ராஜாராமன் நகரச் சூழலிலிருந்து விலகிய இடமும்,