பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 ஆத்மாவின் ராகங்கள் அதிகக் கனிவுடனும் தன்னை அவர் பேணி வளர்த்ததை எல்லாம் அவள் கூறக்கேட்டுக் கேட்டு, அவர் ஒரு ஜஸ்டிஸ் கட்சி ஆள் என்ற எண்ணமும், மாற்சரியமும் மெல்ல மறைந்து பெருந்தன்மையான ஒரு மனிதர் என்ற எண்ணம் மட்டுமே தோன்றி அமைதி பெற்றது அவன் மனத்தில். போகப் பொருளாகக் கிடைத்த ஒருத்தியை அப்படியே ஒதுக்கிவிடாமல் - அவளையும் மனைவியாக நடத்தி அவள் மகளையும் வாஞ்சையோடு மகளாகப் பாவித்த பெருந்தன்மைக்காக மனச்சாட்சியுள்ள மனிதர்'- என்ற அளவு அவன் இதயத்தில் புதுப்பார்வை பெற்றார் நாகமங்கலத்தார். சமூகத்துக்குப் பயந்து அந்தரங்கமாக இருந்தாலும், இந்த உறவுக்கும் பாசத்துக்கும் அவர் போலித் திரையிட்டு மனத்திலிருந்தே மூடவில்லை என்பது ராஜாராமனுக்குப் பெரிய காரியங்களாகத் தோன்றின.

★ ★ ★

ராஜாராமன் விடுதலை பெற்று வந்த பின் திலகர் தேசிய வாசகசாலை நண்பர்கள் கதர்ப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார்கள். தெருத் தெருவாகக் கிராமம் கிராமமாகப் பாரதி பாடல்கள் முழங்கின. கதர் விற்பனை துரித மடைந்தது. வந்தே மாதர கீதம் வளர்ந்தது. எங்கும் ராட்டை நூற்பவர்கள் பெருகினார்கள். .

இந்த நல்ல சமயத்தில் மறுபடியும், தங்கள் வட்டாரத்துத் தேசத் தொண்டர்களைச் சிறைக்கு அனுப்புவதற்காக ஜோடிக்கப்பட்ட சதிவழக்கு ஒன்றை ராஜாராமனும், நண்பர்களும், எதிர்கொள்ள வேண்டியிருந்தது. விருதுப் பட்டி தபாலாபீஸ் மீதும் பூர் வில்லிபுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் மீதும் வெடிகுண்டு எறிந்து தகர்க்க முயன்றதாக உண்மைத் தேசத் தொண்டர்களான காமராஜ் நாடார், கே. அருணாச்சலம், கே. எஸ். முத்துசாமி ஆசாரி, மீசலூர் நாராயண்சாமி, விருதுபட்டி மாரியப்பா ஆகியவர்கள் மேல் ஜோடிக்கப்பட்ட வழக்கு ஒன்றை ராமநாதபுரம் போலீசார் தொடர்ந்தார்கள். வேலூர் சிறையில் ஏற்கனவே