பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 169 தொண்டர்கள் செயலாற்றுவதற்கு ஆர்வமாயிருந்தார்கள். அந்தச் சமயம் ஆசிரம வேலைகளுக்காக வெளியே தேசபக்தியுள்ள செல்வந்தர்களிடம் கூட உதவி கேட்க ஏற்ற சூழ்நிலை உடையதாக இல்லை. ராஜாராமன் ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தான். மேலுர் நிலம் வீடு விற்றுப் பணம் கொடுத்து வைத்திருந்ததில் பெரும் பகுதியை மதுரத்திடமிருந்து வாங்கி, வசூலான சிறு தொகையையும் சேர்த்து, நிரந்து மகாத்மாவின் ஹரிஜன நிதிக்காகக் கொடுத்தாயிற்று. அதைப்போல இரண்டு மடங்கு, வாசகசாலை, துண்டுப் பிரசுரம், முத்திருளப்பன் போன்றவர்களுக்கு உதவி, என்று மதுரமே இதற்குள் நிறைய அவள் கையை விட்டுச் செலவழித்திருக்க வேண்டுமென்று கணக்குப் பார்த்தபோது புரிந்தது. அவன் பணமும் தவிர அதிகமாகவே கையிலிருந்து செலவழித் திருந்தாள் அவள். போதாதற்குப் பெரிய சொத்தாகிய மாந்தோப்பையும் இப்போது ஆசிரமத்துக்கு எழுதிக் கொடுத்துவிட்டாள். ஆசிரமக் கட்டிட ஏற்பாட்டுக்குப் பணமுடை பற்றிப் பிரஸ்தாபித்தாலும் மதுரம் ஏதாவது செய்வாள் என்றாலும், அவளுக்குச் சிரமம் தரக்கூடாது என்பதற்காக அதைப் பற்றியே அவன் அளிடம் பேச்செடுக்க விரும்பவில்லை. வைத்தியநாதய்யர் நல்ல மனத்தோடு கொடுத்த ஐநூறு ரூபாய் மட்டும் கையில் இருந்தது. பணத்துக்கு ஒரு ஏற்பாடு செய்து ஆசிரம வேலையைப் பிருகதீஸ்வரனிடம் ஒப்படைத்து விட்டால் தானும், முத்திருளப்பனும், தனி நபர் சத்தியாக்கிரகத்தில் இறங்கலாம் என்ற எண்ணம் ராஜாராமனுக்கு இருந்தது. ஆனால், பணத்திற்குத்தான் ஒரு வழியும் புரியவில்லை. அவர்கள் இவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த வேளையில் குருசாமி, தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கோர்ட்டுக்கு முன் மறியல் செய்து சிறை சென்றுவிட்ட செய்தி தெரிந்தது. தானும், முத்திருளப்பனும் தயங்கும்படி நேர்ந்ததற்காக ராஜா ராமனுக்கு நாணமாயிருந்தது. பிருகதீஸ்வரன் நடுவே புதுக்கோட்டை போய் ஒரு வாரம் இருந்துவிட்டுத் திரும்பினார். வரும்போது அவர் ஒரு ஆயிரம் ரூபாய்