பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 ஆத்மாவின் ராகங்கள்

கூடிய கூட்டமோ கலையவே இல்லை. வந்தே மாதரம் செட்டியாரும், சீநிவாசவரதனும் கூட்டத்தை அமைதிப் படுத்தி வன்முறைகளைத் தவிர்க்க முயன்றார்கள். போலீஸார் தடியடியில் இறங்கிக் கூட்டத்தைக் கலைக்க முற்படவே கூட்டம் கல்லெறியில் இறங்கியது. போதும் போதாத குறைக்கு ஸ்பெஷல் ரிஸர்வ் போலீஸ் வேறு லாரி லாரியாக வந்தது. பத்துப் பன்னிரண்டு தேசபக்தர்களுக்குப் பயங்கரமான ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. ஐந்தாறு பேர் கூட்டத்திலேயே உயிர் நீத்தனர். குலசேகரன் பட்டனத்தில் ஒர் அதிகாரி கொலையே செய்யப்பட்டார். மதுரையிலோ மேங்காட்டுப் பொட்டல் தடியடி உள்ளுர்த் தேச பக்தர்களிடையே ஆத்திரமூட்டியது.

அதனால் மறுநாள் நகரில் பெரும் கொந்தளிப்பு மூண்டது. போலீஸ் லாரிகள் நுழைய முடியாதபடி பெரும் பெரும் கற்களாலும், குப்பைத் தொட்டிகளாலும் தெரு முனைகளை அடைத்துவிட்டுச் சின்னக்கடைவீதித் தபாலாபீஸ்-க்கும், தெற்குச் சித்திரை வீதித் தபாலா பீஸுக்கும் நெருப்பு வைக்கப்பட்டது. வைத்தியநாதய்யர் முதலியவர்களும் கூட ஆவேசமடைந்தனர். 144 உத்தரவு யாருக்குமே நினைவில்லை. நகரமே போர்க்களமாகி விட்டது. கட்டுப்பாட்டை உண்டாக்க முடியாமற் போகவே, நகர் மிலிடரி கண்ட்ரோலில் ஒப்படைக்கப்பட்டது. வைத்தியநாதய்யர் உட்படப் பலர் கைதாகினர். எல்லா தேசபக்தர்களும் பாதுகாப்பில் வைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டனர். அடக்குமுறை முழு மூச்சாக நடை பெற்றது. மதுரை பழைய மதுரையாகச் சில மாதங்கள் ஆயின. சிப்பாய்க் கலகத்துக்குப் பின்பு நடந்த மாபெரும் சுதந்திர யுத்தமே இதுதான் என்று கூறுமளவுக்கு இப் போராட்டம் முக்கியமாய் இருந்தது. .

மதுரையில் அதே வருடம் அக்டோபர் இரண்டாந்தேதி காந்தி ஜயந்தி அன்று கதர்க்கொடியுடன் ஊர்வலம் சென்ற தொண்டர்களையும் இரு பெண்மணிகளையும் போலீஸார்

பிடித்து லாரிகளில் ஏற்றிக் கொண்டு போய்த் தொலைவில்