பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 ஆத்மாவின் ராகங்கள் பயிரைச் செந்நீர்விட்டுப் பெறவேண்டிய நிலையும் வந்துவிட்டது குறித்து நிதானமாக யோசித்தான் ராஜாராமன்.

மதுரை மேங்காட்டுப் பொட்டல் தடியடியில் உயிர் நீத்தவர்களையும் அக்கினித் திராவக வழக்கில் கைதானவர்களையும் பற்றி அறிந்தபோது வேதனை யாயிருந்தது. சொந்தக் கவலைகளும், நாட்டின் சுதந்திர இயக்கத்தைப் பற்றிய கவலைகளுமாக அமராவதி சிறையில் தவித்தான் அவன்.

ராஜாராமனும், அவனைப் போலவே அமராவதியிலிருந்த பிற தேசபக்தர்களும் விடுதலையாகு முன், இந்த இரண்டரை ஆண்டுச் சிறைவாசக் காலத்திற்குள், நாட்டில் பல நிகழ்ச்சிகள் அவர்களை அறியாமலே நடந்து விட்டன. எதிர்காலத்துக்கு மிகவும் பயன்படவல்ல சத்தியமூர்த்தி போன்றவர்களின் மரணம் தமிழ்நாட்டைத் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது. -

இந்திய சிப்பாய்களை வைத்து ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் தோற்கச் செய்து டெல்லி செங்கோட்டையைப் பிடிக்கத் திட்டமிட்ட இந்திய தேசிய இராணுவமும் அதன் தலைவர் சுபாஷ-ம் தீரச் செயல்கள் பலவற்றை எட்டாத தொலைவிலிருந்து சாதித்தனர். காந்தியடிகளிடம் தமக்கு அபிப்பிராய பேதம் ஏற்பட்டபோதிலும், அவரையே தம் தேசப்பிதாவாகக் கருதுவதாக நேதாஜி சுபாஷ் அரிய செய்தியை ஒலி பரப்பிய காலத்தில், இந்தியாவில் அதைக் கேட்டவர்களுக்கொல்லாம் மெய்சிலிர்த்தது. இளைஞர்களின் நெஞ்சங்களில் ஜெய் ஹிந்த்' என்ற கோஷம் எதிரொலித்துக் கொண்டிருந்த காலம் o . آقای نیایی

பின்னால் இந்திய தேசிய ராணுவம் சரணடைய நேரிட்டதும், புலாபாய் தேசாயின் வாதத்திறமையால் சரண் அடைந்து கைதான, இ.தே.ரா. வீரர்கள் பலர் விடுதலை பெற்றதும், நேதாஜி இருக்கிறாரா இல்லையா என்பதே