பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 - ஆத்மாவின் ராகங்கள் நீர் நெகிழத் தெரிவித்தார் பிருகதீஸ்வரன். சில சமயங்களில் தாம் யாத்திரை செய்து கொண்டிருந்த ஊர்களில் வசூல் செய்த தொகையைச் சுவாமி விலாட்சணானந்தர் என்பவர் ஆசிரமத்துக்கு அவ்வப்போது அனுப்பி உதவியதாகவும் தெரிந்தது. அவற்றை எல்லாம் கேட்ட போது பிருகதீஸ்வரனும் நண்பர்களும் ஆசிரமத்தை எவ்வளவு சிரமப்பட்டு நடத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்த்து. -

'வ.வே.சு. ஐயரின் ஆசிரமத்தில் இருந்த ஆத்ம பலமும் தாஸரின் சாந்தி நிகேதனத்திலிருப்பது போன்ற கலாசார பலமும், மகாத்மாவின் சபர்மதியில் இருந்த புனிதத் தன்மையும் பொருந்தியதாக இது வளர வேண்டுமென்று ஆசைப்பட்டு இத்தனை நாள் கட்டிக்காத்துவிட்டேன் ராஜா போனமாதம் வடக்கே இருந்து ஒரு குஜராத்தி தேசபக்தர் இங்கே இந்த ஆசிரமத்தைப் பார்க்க வந்திருந்தார். அவர் என்ன சொன்னார் தெரியமா? எல்லாவிதத்திலும் இதுவும் சபர்மதி ஆசிரமத்தைப் போன்ற சூழ்நிலையிலேயே அமைந்திருக்கிறது. அதே போல் அமைதி, அதே போல் நதிக்கரை, அதேபோல் இயற்கைச் சூழ்நிலை, எல்லாம் வாய்த்திருக்கிறது என்று புகழ்ந்தார் அவர் நாளடைவில் இதை இப்படியே ஒரு சுதேசிப் பல்கலைக் கழகமாக ஆக்கிவிட வேண்டும்' என்று உற்சாகமாகக் கூறினார் பிருகதீஸ்வரன். தினந்தோறும் ஆசிரமத்தில் இப்போது நூறு சர்க்காக்கள் நூற்கப்படுகின்றன என்பதை அறிந்து ராஜாராமன் மகிழ்ந்தான். . -

பரபரப்பான திருப்ப்ரங்குன்றம் மாநாட்டைப் பற்றியும் அவர்கள் பேசினார்கள். சத்தியாக்கிரகம் என்ற மகா நோன்பு மனிதர்களின் போட்டி பொறாமைகளில் அழிந்து விடக் கூடாது என்று எப்போதும்போல் கவலை தெரிவித்தார் பிருகதீஸ்வரன். 'திருச்செங்கோடு நிகழ்ச்சியால் தான் இவ்வளவும் வந்தது. திருச்செங்கோடு தேர்தல் - என்ற ஒன்று வந்திருக்காவிட்டால் இவ்வளவு நடந்திருக்காது' என்று முத்திருளப்பன் அபிப்பராயப்பட்டார். இந்தக் கருத்து