பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 ஆத்மாவின் ராகங்கள் முனிவரைச் சந்தித்து வணங்கிய பெருமிதத்தோடு ஆசிரமத் திற்குத் திரும்பினார்கள் ராஜாராமனும் நண்பர்களும், காந்தியடிகள் ஆசிரமத்துக்கு வரமுடியவில்லையே என்ற மனத்தாங்கல் அவரை தரிசித்து வணங்கியதிலும் அவரோடு சிறிது நேரம் உரையாடியதிலும் மறைந்து விட்டது.

இதற்கு முந்திய முறை மகாத்மா மதுரை வந்திருந்த போது மதுரம் தன் விலையுயர்ந்த நகைகளை எல்லாம் கழற்றி ஹரிஜன நிதிக்குக் கொடுத்ததும் தான் சுப்பராமன் பங்களாவில் அவரைச் சந்தித்து வணங்கியபோது அங்கே உடனிருந்த டி.எஸ்.எஸ். ராஜன் வாய் தடுமாறி "மிஸ்டர் காந்தி ராமன்' என்று தன்னை அழைத்ததையும் நினைத்துக் கண் கலங்கினான் ராஜாராமன். எப்படி நினைத்தாலும் எதை நினைத்தாலும் அந்த நினைவு மதுரத்தோடு போய் முடிந்து அவன் மனத்தைத் தவிக்கச் செய்தது. அவனுடைய நினைவுகளின் எல்லா ஆரம்பத்துக்கும் அவளே முடிவாயிருந்தாள். . -

★ × x

மெல்ல மெல்ல ஒரு வருடமும் ஒடிவிட்டது. அவள் இறந்த வருடம் முடிந்து முதல் சிரார்த்த தினத்தன்று பிருகதீஸ்வரனையும் அழைத்துக் கொண்டு நாகமங்கலம் போயிருந்தான் அவன். ஜமீன்தாரிணி அம்மாள் அன்று மதுரத்துக்காக சுமங்கலிப் பிரார்த்தனை கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்த நிகழ்ச்சி அவர்கள் மனத்தை உருக்கியது. தன் கணவனுக்கும், தனக்குச் சக்களத்தியாக வந்து முளைத்த யாரோ ஒருத்திக்கும், பிறந்த பெண் என்று ஒதுக்காமல் வயிற்றில் பிறந்த பெண்ணுக்குச் செய்வதுபோல் அவள் சிரத்தையாக நீராடிப் பட்டினி இருந்து, நாலு சுமங்கலிகளுக்குச் சாப்பாடு போட்டுப் புதுப் புடவையும், வெற்றிலைப் பாக்கும், மஞ்சள் கிழங்கும் வைத்துக் கொடுத்ததைப் பார்த்து அவர்கள் மனம் நெகிழ்ந்தே போனார்கள். அன்று முழுவதும் நாகமங்கலத்திலும் மலையடிவாரத்து வீட்டிலுமாக இருந்துவிட்டு, மறுநாள்