பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 235 அவர்கள் ஆசிரமத்துக்குத் திரும்பினார்கள். மறுநாளும் அதற்கடுத்த நாளும் ஒரு வேலையும் ஓடாமல் பிரமை பிடித்தது போல் இருந்தான் ராஜாராமன். மனம் தேறி அவன் பழைய நிலைமை அடைய இரண்டு நாள் பிடித்தது. மறுவாரம் ஆசிரமம் நடத்திவந்த பள்ளிக் கூடத்துக்கு அரசாங்க அங்கீகாரமும் கிராண்ட்'டும் வாங்குகிற விஷயமாக அவனும், பிருகதீஸ்வரனும் சென்னைக்குப் போக வேண்டியிருந்தது. போகும்போது வழியில் திருச்சியில் இறங்கிப் புதுக்கோட்டை போய்க் குடும்பத்தினரோடு ஒரு நாள் தங்கிப்போக விரும்பினார் பிருகதீஸ்வரன். ராஜாராமனும் அவரோடு புதுக்கோட்டைக்குப் போனான். பிருகதீஸ்வரன் மனைவி, மதுரத்தின் மரணத்துக்காக அவனிடம் துக்கம் கேட்டு அழுதாள். 'மதுரத்தைப் போலத் தங்கமான பெண்ணை நான் பார்த்ததே இல்லை' என்று வியந்து கூறி, மதுரத்தோடு தான் மதுரையில் இருந்த நாட்களை நினைவு கூர்ந்தாள் அவள். தன்னைப் போலவே எல்லாரும் மதுரத்தை நினைவு வைத்துக் கொண்டிருக் கிறார்கள் - எல்லாருடைய நினைவிலுமே அவள் பசுமையாகத் தங்கியிருக்கிறாள் என்பதை அறியும் போதெல்லாம் அவன் மனத்தைத் தவிக்க வைத்தது. அடைய முடியாத - அடையக் கூடாத ஒரு நஷ்டத்தைத் தான் உணர்ந்து அனுபவிப்பது போதாதென்று ஒவ்வொருவராக அதை நினைவுபடுத்தும் போதெல்லாம் அந்த நஷ்டத்தின் கனம் பெரிதாகித் தாங்க முடியாத பாரமாய் அவன் இதயத்தையே அமுக்கியது. - - -

மறுநாள் அவர்கள் புதுக்கோட்டையிலிருந்து சென்னை புறப்பட்டார்கள். சென்னையிலும் சில தேசபக்தர்களையும், மந்திரிகளையும், பிரமுகர்களையும் அவர்கள் சந்தித்தனர். ஆசிரமத்துக்கு அங்கீகாரமும் உதவித் தொகையும் பெற முயலும் முயற்சி வெற்றியடையும் போலிருந்தது. எல்லாருமே உதவி செய்வதாக வாக்களித்தனர். ஆசிரமத்தின் எதிர் காலத்தில் நம்பிக்கையோடு அவர்கள் சென்னை யிலிருந்து திரும்ப முடிந்தது. பொருளாதார ரீதியாக ஆசிரமத்துக்குப் பல சிரமங்கள் இருந்தாலும், அவர்கள்