பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 79 மனம் மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருக்கிறதென்பதை உணர முடிந்தது அவரால்.

கதவைத் தாழிட்டுக் கொள்ளுமாறு மீண்டும் கூறி விட்டுப் படியிறங்கினார் அவர் கதவைத் தாழிட்டுக் கொண்டு சிறிது தயங்கி நின்றபின், ஏதோ முடிவுக்கு வந்தவன் போல் அவன் அந்த மெத்தையில் நடுவாகப் படுத்துக் கொண்டான். தலையணை மெத்தை எல்லாம் பூவும், சந்தனமும் மணந்தன. பச்சைக் கற்பூர வாசனை கமகமத்தது. நீண்ட நேரம் பத்தர் சொல்லிய வற்றையெல்லாம் யோசித்துக் கொண்டே படுத்திருந்தான் அவன். அவர் சொல்லியது நியாயமென்றே அவனுக்குப் ه لقيَ ساسا لسا

'நான் இத்தனை வெறுக்கும்படி அவள் அப்படி என்னதான் செய்துவிட்டாள். அவள் ஒண்ணாம் நம்பர்ச் சந்தில் பிறந்ததும், தனபாக்கியத்தின் கைகளில் வளர்ந்ததும், வாழ்வதும் அவள் பிழைகள் அல்லவே! மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது பெரிதில்லை. எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் பெரியது. ஜாதியையும், குலத்தையும் வைத்து மட்டும் நான் ஒருத்தியை உதாசீனம் செய்ய முடியுமானால், காந்தியை ம்னப்பூர்வமாகப் பின்பற்றுகிறவனாக இருக்க மாட்டேன்; உதாசீனம் - அரக்கர்களுக்காகவும், கருணை - மனிதர்களுக்காகவும், கடாட்சம் - தெய்வங்களுக்காகவும் உபகரிக்கப்பட்ட குணங்கள். எந்த அளவுக்கு மற்றவர்களை உதாசீனப்படுத்தும் குணம் எனக்குள் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நான் ராட்சஸ்னாகிறேன். எந்த அளவுக்கு மற்றவர்கள் மேல் கருணை காட்டும் சுபாவம் எனக்குள் இருக்கிறதோ அந்த அளவுக்கு நான் மனிதனாகிறேன். எந்த அளவுக்கு மற்றவர்கள் மேல் என் கடாட்சம் சுகத்தை உண்டாக்க முடியுமோ, அந்த அளவுக்கு நான் தேவதையாகிறேன். தேவதையாக முடியாவிட்டாலும் நான் மனிதனாகவாவது இருக்க வேண்டும்.' - -