90 ' ஆனந்தத் தேன் மேடாகி உயர்ந்தது. வீரத்தை வீரத்தால் மாற்றவேண்டும். முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்? முருகப் பெருமான் தன்னுடைய வீரத்தால் மறுபடியும் மேட் டைப் பள்ளமாகவும். பள்ளத்தை மேடாகவும் ஆக்க நினைத்தான். அசுரர்களை அடக்கித் தேவலோகத்தை இந்தி எனுக்கு மீட்டுக் கொடுக்க எண்ணினாள். அவனுடைய வாகனமாகிய மயில் கால் எடுத்து வைத்ததனால் மேடு பள்ளமாயிற்று; பள்ளம் மேடாயிற்று. அந்த மயிலுக்கு நாயகனாகிய முருகப்பெருமானும் அதைத்தான் செய்தான். இப்படி நயமாக ஒரு கருத்துத் தோன்றுகிறது. சம நிலை மற்றொரு கருத்தையும் இந்தக் காட்சி உள்ளடக்கி யிருக்கிறது. மனிதர்களுடைய உள்ளத்தில் காமம் மோகம் போன்றவைகளினால் பெரும் பள்ளம் வீழ்ந்திருக் கிறது. உயர்ந்த குணங்களினால் மேடும் உண்டாகியிருக் கிறது. தீய குணமாகிய கடலும், உயர்குணமாகிய மலை யும் இருக்கின்றன. இவற்றால் மனம் என்ற ஒன்று இன்ப துன்பத்திற்கு ஆளாகிறது. இன்ப துன்பம் இரண்டும் கலந் ததே வாழ்க்கை. நமது வாழ்க்கை வெறும் இன்பம் மாத் திரம் அமைந்தது அல்ல; வெறும் துன்பம் அமைந்ததும் அல்ல. முழுவதும் துன்பம் அனுபவிப்பவர் யாரும் இல்லை. முற்றும் இன்பம் அநுபவிப்பவரும் இல்லை. இன்ப மேடும், துன்பப் பள்ளமும் உள்ள மனம் தூயதன்று. அதில் அமைதி இராது. சம நிலை பெற்றால்தான் சாந்தி பிறக்கும். சுகத்தால் இன்பமடையாமலும், துக்கத்தால் துன்பமடை யாமலும் இருக்கும் மனமே சமநிலையையுடைய மனம். அந்த நிலையை நிர்வேதம் என்பர். முருகன் மயில் வாகனத்தில் எழுந்தருளி வந்துவிட் டால் அந்த மயில் போடுகின்ற நடையே மலையைப் பொடி யாக்கி, கடலைத் திட்டாக்கிவிடும்; மனத்தைச் சமன்படுத்தி
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/104
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை