பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix யென்று சொல்லமாட்டேன். ஆயினும் இவை ஓரளவு பொருந்தும் என்றே எண்ணுகிறேன். கூர்ந்து உணர்ந்து பொருத்தத்தை. ஆராயும்படி அன்பர்களை வேண்டுகிறேன். அலங்கார மாலையில் மூன்றாவது புத்தகம் இது. முன் இரண்டும் எப்படி உருவாயினவோ அதே முறையில்தான் இதுவும் உருவாயிற்று. சுருக்கெழுத்தால் உருவாக்கித் தரும் அன்பர் திரு அனந்தன் மேலும் மேலும் தம் அன்பை வழங்கி உபசரிக் கிறார். தேனாம்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அறக்காப்பாளர் மூவரும் தம் ஆர்வத்தை என்பால் வளர்த்து. வருகின்றார்கள், இவர்களுடைய அன்பை எனக்குக் காணியாக் கித் தந்த முருகன் திருவருளை எண்ணி வாழ்த்துவதையறி வேறு என் செய்யவல்லேன் ! சுல்யாண நகர், மயிலை. 10-8-'56 கி. வா. ஜகந்நாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/11&oldid=1725217" இலிருந்து மீள்விக்கப்பட்டது