102 ஆனந்தத் தேன் பதும் அதுவே. அதை நினைக்கும்போது அருணகிரியாருக்குக் கற்பனை விரிகிறது. மயிலின் பிரதாபத்தைப் போன பாட் டிலே நினைத்தவர், தொடர்ந்து சேவலின் பெருமையை இப் போது நினைக்கிறார். கோழி எவ்வளவு பெருமையையுடையது! தேவர்கள் பாராட்டும் கோழி அது; தேவ மகளிர் வாழ்த்தும் கோழி. "கோழி ஓங்கிய வென்று அடு விறற்கொடி வாழிய பெரிது" என சூரர மகளிர் வாழ்த்துவார்களாம். திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் அவ்வாறு சொல்கிறார். அருணகிரிநாதக் குழந்தை இந்தச் சேவலைப் பற்றிக் கற்பனை செய்ய ஆரம் பித்தது. அந்தக் கற்பனையில் இயற்கையோடு ஒட்டிய பொருத்தம் இருக்க வேண்டுமென்பது அவசியம் அன்று. இது நடக்கும், இது நடக்காது என்று ஆராய்ந்து சொல்வ தற்கு அங்கே வேலை இல்லை. இந்த நினைப்பினால் உள்ளம் இன்புறுவதுதான் பயன். இப்போது சேவற்கொடியைப் பாராட்டுகிறார் அருண் கிரியார். வாகனமும் கொடியும் . கடவுளர்களுக்குப் பெரும்பாலும் எது வாகனமோ அதுவே கொடியாக இருக்கும். சிவபிரானுக்கு வாகனம் இடபம்; கொடியும் இடபந்தான். திருமாலுக்கு வாகனம் கருடன்; கொடியும் கருடன்தான். முருகப்பெருமானுக்கு அப்படி அல்ல. வாகனம் மயில்; கொடி கோழி, மயிலும் கொடியாக இருப்பதுண்டு. கொடி வேறாக இருந்தாலும் வாகனத்துக்கும் கொடிக்கும் ஒரு தொடர்பு உண்டு. பன்மனது பாதி அம்சம் வாகனமாகிய மயிலாகவும்,மற் றொரு பாதி சேவல் கொடியாகவும் இருக்கின்றன. சூர
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/116
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை