சேவற் பதாகை 107" தெரியவில்லை. வீட்டிற்கு வந்தபின் அவருடைய மாணாக் கர்கள், "சுவாமி, நீங்கள் ஏன் அப்பொழுது அழுதீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், "கடவுளுக்குச் சேவை செய்யவில்லை என்று தர்மகர்த்தர் அவளை அடித் தாரே, அதுமாதிரி என்னை யாராவது சிறு வயசிலிருந்தே அடித்திருப்பார்களானால் நான் எப்பொழுதோ உய்ந்திருப் பேனே!" என்றார். அவர் சிவபக்தராதலின் அப்படி எண் ணினார். நல்லவற்றையே நினைப்பதற்கும் தனி மனப் பக்குவம் வேண்டும். ஆஞ்சநேயர் பண்பு கம்பராமாயணத்திலே ஓர் இடம். ஆஞ்சநேயர் சீதையைத் தேடிக் கொண்டு இலங்கை போகிறார். இலங் கையிலே சீதையை எங்கும் காண வில்லை. அவர் மனம் துடியாய்த் துடிக்கிறது. "ராமபிரான் சீதையைக் கண்டு வருவேன் எனக் காத்திருப்பாரே; அவருக்கு என்ன சொல்கிறது? சீதையைக் காணோமே! அந்தப் பாவி ராவ ணன் சீதையை என்ன செய்திருப்பானோ? கொன்றானோ கற்பழியாக் குலமகளைக் கோளரக்கன் தின்றானோ" என்று நினைத்து வேதனைப்படுகிறார். வேறு சிலர், "அவன் சீதையைக் கெடுத்திருப்பானோ? அதனால் அவள் தற்கொலை செய்து கொண்டிருப்பாளோ?" என்று எண் ணலாம். மனத்தாலும் அவன் அவளைக் கெடுத்திருப் பானோ என்ற ஐய நினைப்பு ஆஞ்சநேயருக்கு உண்டாக வில்லை. இது அவருடைய தூய உள்ளப்பண்பைக் காட்டு கிறது. இப்படித்தான் நல்ல குணம் படைத்தவர்கள் உலகி லுள்ளவற்றையெல்லாம் நல்லனவாகவே நினைக்கிறார்கள். இறைவனிடத்திலே அன்பு மீதூர்ந்துவிட்டால் எல்லாப்
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/121
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை