பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ஆனந்தத் தேன் மூவரையும் வைத்துக் கடைசியில் குமாரனிடம் வந்து முடிக்கிறார். ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரன். தமக்குச் சமானமே இல்லாதவர் சிவபெருமான். ஒருவர். அவரைத் தம் பங்கில் வைத்துக் கொண்டிருப்பவள் உமாதேவி. அவள் குமாரன் முருகன். அவனைப் பற்றிச் சொல்லப் போகிறார். தாயின் சார்பு இங்கே ஒரு புதுமையைக் காண்கிறோம். அப்பர் சுவா மிகள், பெற்றவள் பங்கினன்"என்றார்.உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவன் என்று சொல்வதே பெருவழக்கு. அர்த்தார்சுவரன் என்று அந்தக் கோலத்திலுள்ள இறை வனுக்குப் பெயர். அருணகிரிநாதர் அர்த்த நாரீசுவாளைச் சொல்லவில்லை; அர்த்தேசுவர நாரியைச் சொல்கிறார். இறை வனைத் தன் பாகத்திலே கொண்டவள் உமாதேவி என்று அம்பிகைக்குத் தலைமை கொடுத்துச் சொல்கிறார். குழந்தையாகிய முருகன் கட்சியைச் சேர்ந்தவர் அருண கிரியார். குழந்தைக்கு அம்மா, அப்பா இருவரிடமும் அன்பு உண்டு. ஆனால் அம்மாவிடம் ஒருமாற்று அதிகமாகவே இருக்கும். குழந்தை அம்மாவை உணர்ந்து, பிறகே அப் பாவை உணர்கிறது. தாயினிடம் ஒட்டிக் கொண்டுள்ள குழந்தைக்கு. அம்மா, அப்பாவின் மனைவி அல்ல; அப்பாதான் அம்மா வின் கணவர்.உலகத்தாருக்கு அவருடைய மனைவி அவள். ஆனால் குழந்தைக்கு அவளுடைய கணவர் அவர். அவளுக் குத்தான் தலைமை. அவள் உடையவள்; அவன் உடைமைப் பொருள். அம்மாவுக்குப் பெருமை தரும் குழந்தையின் கட்சியைச் சார்ந்த அருணகிரி நாதரும் அந்த அன்னைக்கே சிறப்புக் கூறுகிறார்.