128 ஆனந்தத் தேன் போவான்' என்ற நினைவு நமக்கு உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. யாரேனும் இறந்தால் இந்த நினைவு எழுகிறது; அச்சம் உண்டாகிறது. யாரேனும் பெரியவர் உலகத்தின் உண்மையை எடுத் துச் சொல்லிச் சொற்பொழிவு ஆற்றும்போது நமக்கு நினைவு உண்டாகிறது; அஞ்சுகிறோம். 'இனி, போகிற வழிக்குப் புண்ணியம் தேடவேண்டும்' என்ற எண்ணங் கூட உண்டாகிறது. ஆனால் அது சில நிமிஷங்களிலே மறைந்து விடுகிறது. . இந்த இரண்டுவிதமான நிகழ்ச்சிகளிலும் உண்டாகிற உணர்ச்சியை ஸ்மசான வைராக்கியம், புராண வைராக்கி யம் என்று சொல்லுவார்கள். இந்த வரிசையில் மற்றொன் றும் உண்டு. அதைப் பிரசவ வைராக்கியம் என்று சொல்லு வார்கள். குழந்தையைப் பெறும்போது உண்டாகும் வேத னையைப் பொறுக்கமுடியாத தாய், இனித் தன் மணாளனோடு இன்புறக்கூடாது என்று தீர்மானம் செய்து கொள்கி றாள். ஆனால் குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் அந்த வேதனை மறந்துபோய் விடுகிறது. இன்னும் ஒரு வைராக்கியம் உண்டு. அது நாயின் வாழ்க்கையோடு சம்பந்தம் உடையது. நாய், "இனிமேல் நாம் எச்சில் இலையைத் தொடவே கூடாது" என்று முடிவு செய்துகொண்டு குப்பைமேட்டில் படுத்திருக்குமாம். சொத் என்று எங்கேனும் எச்சில் இலை விழுகிற ஒலி காதில் பட்டால் இந்த எண்ணத்தை மறந்து உடம்பை உதறிக் கொண்டு புறப்பட்டுவிடுமாம். இதைச் சுவான வைராக் கியம் என்று சொல்வது வழக்கம். ஒரு கணத்துக்கு நிற்கிற வைராக்கியங்கள் இவை. அசுர இயல் மனிதனிடம் இருக்கும் இந்த இயல்பு அசுரர்களிட மும் இருக்கிறது. அப்படிச் சொல்வதை விட அசுரர்க
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/142
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை