.130 ஆனந்தத் தேன் பில்லாத புழுக்கள் இறக்கின்றன. குவளை கூம்புகிறது. ஆந்தை அஞ்சுகிறது. அவை தம் இயல்புக்கு ஏற்ற பயனை அடைகின்றன. அவ்வண்ணமே, இங்கே முருகன் திரு வரைக் கிண்கிணி ஓசையைக் கேட்டுத் தேவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் முக மலர்ச்சி பெறுகிறார்கள். அதுகாறும் தாம் பெற்றிருந்த அச்சத்தை உதறுகிறார்கள். ஆனால் அசுரர்களோ வாட்டமுறுகிறார்கள். அது நாறும் அவர்கள் அறியாத அச்சமும் நடுக்கமும் அவர்கள்பா உண்டாகின்றன. முருகன் பராக்கிரமம் ': முருகன் கிங்கிணி ஓசையின் இனிமையை அருணகிரி நாதர் இங்கே சொல்லவில்லை. எல்லாக் குழந்தைகளின் கிண்கிணிக்கும் அந்த இனிமை உண்டு. அது கிங்கிணர் யின் இயல்பே யன்றி, குழந்தையின் பெருமை அன்று முருகன் திருவரைக் கிங்கிணி ஓசையினால் விளையும் விளைவு கள் அந்தக் கிங்கிணியால் விளைந்தவை அல்ல; முருகனால் விளைந்தவை.கிங்கிணி முருகன் அணிந்ததாக இருப்பதனால் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்தன. ஆதலின் கிங்கிணியைப் புகழும் முகத்தால் முருகனுடைய பராக்கிரமத்தையே அருணகிரிநாதர் எடுத்துக் காட்டுகிறார். ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரன் உடைமணிசேர் திருவரைக் கிங்கிணி ஓசை படத்திடுக் கிட்டரக்கர் வெருவரத் திக்குச் செவிடுபட் டெட்டுவெற் பும்கனகப் பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர் பயம்கெட்டதே.
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/144
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை