பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஆனந்தத் தேன் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று பூனை நினைக்கும் என்று சொல்வார்கள். அதைப் போல நான் என் உள்ளத்திலுள்ள மயக்கத்தினால் சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைகள் செய்துகொண்டுதான் இருந்தேன். என் உள்ளத்தின் மயக்கம் கெட அவன் மெய்ப்பொருள் பேசினான். அவன் அருள் கிடைத்த மாத் திரத்திலே உலகிலுள்ள யாவும் தெரிந்தன. மலை தெரிந் தது. அதன் மேலே ஏறினேன். அங்கே மரத்தில் உள்ள ஆனந்தத்தேன் கிடைத்தது" என்று அறிவிக்கிறார். இருளும் ஒளியும் ஒளி இருட்டிலே பார்க்கும்போது உலகிலுள்ள பொருள் களின் உருவம் நிறம் முதலியன எப்படி நமக்குத் தெரிய வில்லையோ, அவ்வாறே உலக மாயையில் சிக்கி இருக்கின்ற நம் புறக் கண்களுக்கும் உலகிலுள்ள பொருள்களின் உண்மை இயல்பு விளங்குவதில்லை. சூரியன் கிடைத்த மாத்திரத்திலே உலகிலுள்ள பொருள்களின் நிறம், வடிவம் எல்லாம் தோன்றுவதுபோல, இறைவன் திருவருள் ஒளி கிடைத்துவிட்டால் நம் அகக் கண்களிலெ உலகிலுள்ள பொருள்களின் உண்மைத் தத்துவம் விளங் கும். நமக்கு உலகம் இருண்டு கிடக்கின்றது. " இருள் தருமா ஞாலம்" என்கிறார்கள். ஆனால் சிலருக்கு உலகம் ஒளி மயமாக இருக்கின்றது. அவர்கள் எல்லோரும் இறை வன் அருளால் ஒளி பெற்றவர்கள். உலகை ஒளியுலகாகப் பார்க்க வேண்டுமானால் இறைவன் அருள் வேண்டும். அவ்வருளால் அகக்கண் பெற்றவர்களுக்கு நமக்குத் தோன்றாதன எல்லாம் தோன்றும். உலகத்திலுள்ள பொருள்கள் நமக்கு ஓரளவு நிழற்படமாகத்தான் தெரிகின்றன. அவற்றுக்குள் இருக் கும் தத்துவங்கள் எல்லாம் அவர்களுக்கு நன்றாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/32&oldid=1725238" இலிருந்து மீள்விக்கப்பட்டது