பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஆனந்தத் தேன் கல் மலை அல்ல. விளைந்தது என்றால் உண்டாயிற்று என்று பொருள். திடீரென்று பெரிய மலை எப்படி உண்டா யிற்று? எந்தப் பொருளையும் புதியதாகப் பார்க்கும்போது அது புதியது என்று சொல்வது வழக்கம். நான் ஒரு புதிய ஊரைக் கண்டேன் என்றால் அந்த ஊர் அப்பொழுது தான் உண்டாயிற்றா? இல்லை. அவன் அந்த ஊருக்கு அப் பொழுதுதான் முதல் முதலாகப் போயிருக்கிறான். அவன் காட்சி புதியதே தவிர ஊர் புதியது அல்ல. இவ்வுலகில் புதிய மலையைக் கண்டேன் என்றால் மலை புதியது அல்ல. அது எப்பொழுதும் அங்கே இருப்பதுதான்.ஆனால் அவன் காட்சி புதியது. இதற்கு முன்னால் அதை அவன் பார்க்க வில்லை. "நான் இத்தனை காலமும் இந்த உலகில் பல பல பொருள்களைக் கண்டு வந்தேன். ஆனாலும் அவற்றி னிடையே ஒரு புதிய தத்துவத்தை இப்பொழுதுதான் கண்டேன். அதுவும் அவனது அருளினாலே கிடைத்த ஒளியிலே கண்டேன்" என்பதையே குறிப்பாகச் சொல் கிறார் அருணகிரிநாதர். அருணகிரியார் இறைவனது அருளொளியிலே விளைந்த உயர்ந்த மலை ஒன்றைக் கண்டார். அது ஞான மலை. அந்த மலையின் மேல் ஏற்ஏற அவரது பார்வைக்குத் தடையாக நின்ற பொருள்கள் எல்லாம் கீழே போய்விட்டன. உலகம் முழுவதும் விரிந்து கிடக்கின்ற பொருள்களின் உண்மை இயல்புகள் புலனாயின; அந்த மலையின் உச்சிக்குப் போன பிறகு ஒரு புதிய அநுபவம் விளைந்தது. அது எதில் விளைந்தது? அளியில் விளைந்தது; அன்பிலே விளைந்தது. அறிவாகிற மலையில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக முயன்று ஏறி உச்சிக்குச் சென்றுவிட்டார். இனி அதற்கு மேல் அவர் முயற்சி செய்து போகக்கூடிய இடம் இல்லை. அந்த உயர்ந்த நிலையிலே நின்ற அவருக்கு, தத்துவங்களை எல்லாம் கடந்து நின்ற அவருக்கு, ஆனந்தத் தேன் கிடைத் தது. அது அன்பிலே விளைந்த ஆனந்தத் தேன்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/36&oldid=1725242" இலிருந்து மீள்விக்கப்பட்டது