பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்தத் தேன் அறிவும் அன்பும் 23 அறிவினாலே மாத்திரம் ஆனந்தத் தேனைப் பெறுவது எந்தக் காலத்திலும் முடியாது. உடல் பலத்தினாலேயும் பெறக்கூடியது அன்று அது. அறிவைக் கொண்டு ஒரு விநாடியில் ஆயிரக் கணக்கான பேர்களை அழிக்கும் ஹைட் ரஜன் குண்டுகளை விளைவிக்க முடியும். அவை வெறும் அறிவினாலே விளைபவை. அது பசை இல்லாத அறிவு. எதிலும் ஒட்டாது. வெறும் அறிவில் ஏறி மேலே மேலே அதன் நுனிக் கொம்பையும் தாண்டிப்போக முயன்றால் கீழே விழவேண்டியதுதான். அறிவின் நுனியை அடைந்த பொழுது அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட வேண் டும். நாம் ஒருவருடைய வீட்டுக்கு ஓர் ஆளின் துணை கொண்டு போகிறோம். அவன் நமக்கு அவருடைய வீட் டைக் காட்டத் துணையாக வருகிறான். அந்த வீடு வந்த வுடன், அந்த ஆள் நின்றுகொண்டு விடுகிறான். கூட்டிக் கொண்டு வந்தவனை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு நாம் அந்த வீட்டின் சொந்தக்காரனோடு உள்ளே போகிறோம். துணைக்கு வந்தவனையுமா உள்ளே கூட்டிக்கொண்டு போகிறோம்? இல்லை.நமக்குத் துணையாக இருப்பது அறிவு. அந்த அறிவின் துணை கொண்டு தத்துவமாகிற சாரலில் ஏறி மலையின் உச்சியை அடைந்துவிட்டோம். அந்த இடத்திற்கு அப்பாலே அறிவுக்கு வேலை இல்லை. அறிவு நிற்கவேண்டிய இடம் அது. அதுவரையில்தான் அறிவு நமக்கு வழிகாட்டியாக வரமுடியும். அதற்கு அப்பாலே அநுபவம் வரவேண்டும். அது எப்படி வரும்? அன்பு இருந்தால் வரும். அன்பு வராவிட்டால் இன்ப அனுபவம் நமக்குக் கிடைக்காது. அந்த அன்புப் பசைதான் நம்மை இறைவனோடு ஒட்டுகிறது. எனவே, அறிவின் தலை நிலத்தில் நின்ற ஒருவனுக்கு அன்பு விளைந்தால் ஆனந்தத் தேன் வரும். அறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/37&oldid=1725243" இலிருந்து மீள்விக்கப்பட்டது