பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஆனந்தத் தேன் மலையின்மேல் அன்பு மரத்தில் அநுபவத்தேன் இருக்கிறது. "அன்பிலே விளைந்த முதிர்ந்த ஆனந்தத் தேனை நான் பெறும்படியாக, அதுபவத்திலே தெரிந்துகொள்ளும்படி யாக விளம்பியவாறு என்னே!" என்று ஆச்சரியப்பட்டுப் போகிறார் அருணகிரியார். து தோழியும் மணப் பெண்ணும் அறிவு நிற்கின்ற இடத்திலே, அன்பு விளைகின்ற டத்திலே அநுபவம் தோன்றுகிறது. ஒரு பெண் தன் தலைவனோடு கூடி இன்பம் அனுபவிக்கின்ற கல்யாணம், அன்று. அவளுடைய பரம ரகசியங்களை எல்லாம் அறிந் ள்ள தோழிகள் அவளைச் சுற்றிச் சூழ நின்று காலையி லிருந்து பரிகாசம் செய்கிறார்கள். இரவு வந்தது. நன்றாக அலங்கரிக்கப்பட்டுள்ள படுக்கை அறைக்குள் அவளை அழைத்துப் போகிறார்கள். தந்தை கூடத்திலேயே நின்று விடுகிறார். தாய் கொஞ்ச தூரம் வந்துவிட்டு மறைந்து போகிறாள். தோழிகள் அவளோடு இன்னும் சிறிது தூரம்: போகிறார்கள். அவர்களுக்குள் உயிர்த் தோழி படுக்கை அறை வரையிலும் வருகிறாள். ஆனாலும் அறைக் குள் அந்தப் பெண் ஒருத்திதான் போகிறாள். அதுவரை யிலுந்தான் தோழி வரமுடியுமே தவிர அதற்கு அப்பாலும் அவள் அறைக்குள் வரமுடியாது. அங்கே அவளுக்கு வேலை இல்லை. அறைக் கதவு வரையிலும் வந்த தன் தோழியை அங்கேயே நிறுத்திவிட்டு, அவள் அறைக் கதவைத் தாழிட்டுக்கொண்டு உள்ளே போய்விடுகிறாள், ஆனந்தத்தை அது பலிக்க. அதே மாதிரி ஆன்மாவானது இறைவன் ஒருவன் உண்டென்று அறிந்து, அவனை அடைய முடியாமல் தடுக் கின்ற பல இடையூறுகளையும் அருளாகிய ஒளியைக் கொண்டு போக்கி, உலகத்திலுள்ள உண்மைத் தத்துவங் களை எல்லாம் கண்டு, ஞான மலையின் முடிவை அடைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/38&oldid=1725244" இலிருந்து மீள்விக்கப்பட்டது