பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்தத் தேன் 25 விட்டால், அதற்குப் பிறகு அங்கே அறிவுக்கு வேலை இல்லை. ஆன்மா தனித்துப்போய் இறைவனொடு ஒட்டி ஆனந்தத் தேனை, அன்பிலே விளைகின்ற ஆனந்தத் தேனை, அநுபவிக்க வேண்டும்; தத்துவாதீதமாய் இருக்கின்ற எம்பெருமானோடு கலந்து இன்பத்தை அனுபவிக்க வேண்டும். அங்கே போகும்போது அறிவு இங்கும் நான் இருக்கிறேன் என்று வந்தால் அங்கே இன்பர் இராது. அங்கே நாயகன் வர மாட்டான். நாயகனோடு பெண் தனித்து இருக்கவேண்டிய அறை வரையிலும் துணையாக வந்த தோழி எப்படி அந்த அறையின் வெளியிலே நின்றுவிட்டாளோ, அப்படியே தத்துவங்களை எல்லாம் கடந்து வருவதற்குத் துணையாக இருக்கின்ற அறிவு ஆன்மா இறைவனோடு ஒன்றுபடும் நிலைக்கு முன்னே வெளியிலேயே நின்றுவிட வேண்டும். அறிவு ஆனந்தத் தேனை அனுபவிப்பதற்குக் காரணமாய் இருக்கிறதே தவிர, அந்தத் தேனைச் சுவைக்கும்போது அது நமக்குத் துணையாக இருக்க முடியாது. அன்பு விளைந்தால்தான் இன்பம் உண்டாகும். அறிவு செல்ல முடியாத இடத்திற்கும் அன்பு செல் கிறது. அறிவு மாத்திரம் இருந்தால் பல பல பேதங்களை எல்லாம் காணும். தெளிந்த அறிவிலே அன்பு கலந்து விட்டால் அங்கே அபசுரம் இல்லை. ஒரு பெண் என்னதான் தாய் தந்தையர் வீட்டில் மிகச் செல்லமாக வளர்ந்தாலும் அவர்களை விட்டுவிட்டு நாயகன் வீட்டுக்குப் போய்விடுகிறாள். குழந்தையாக இருக்கும்போது அம்மாவை விட்டு ஒருகணங்கூடப் பிரிந்து இருக்கமாட்டாள். அப்பாவுக்குச் செல்லப் பெண். இருந்தாலும் கல்யாணம் ஆகிக் கணவன் வீட்டுக்குப் போன பிறகு ஒரு பத்து நாள் வருகிறாள் என்று வைத்துக் கொண்டாலும் அந்தப் பத்து நாளைக்குள் பல தடவை தன் வீட்டுக்குப் போகவேண்டுமென்று சொல்லிவிடுகிறாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/39&oldid=1725245" இலிருந்து மீள்விக்கப்பட்டது