பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்தத் தேன் வெளியில் விளைந்தது 29 என்று. வெளி என்றால் ஆகாசம். "அதற்கு ஆதாரம் ஆகாசந்தான்" என்று சொன்னார். ஆகாசம் ஐந்து பூதங் களில் ஒன்று. ஆகாசத்திற்குள் நான்கு பூதங்களும் அடங்கி இருக்கின்றன. ஆனாலும் ஆனந்தம் என்பது இந்த ஆகாசத்திற்கும் மேலே இருக்கிற ஒன்று என்பதைக் காட்ட, வெளியில் விளைந்த வெறும்பாழ் என்று சொன்னார். பாழ் என்று சொன்னால் போதாது- நமது ஊரில் பாழ் வெளி இருக்கிறது என்றால் அந்தப் பாழ் வெளிக்கு அப்பாலே ஊர் இருக்கிறது என்று தெரியும். பாழுக்குப் பக்கத்தில் மனிதன் நடமாடுகிற இடம் தெரியும். ஆனால் இந்தப் பாழுக்கு அப்பாலே எதுவும் இல்லை. இது வெறும் பாழ்; தனக்கு அப்பாலே எதுவும் இல்லாத பாழ். இது இட எல்லை கடந்தது என்று சொன்னபடி. கால எல்லை கடந்தது என்பதற்காக, "அநாதியிலே என்று சொன்னார். பிறகு இது பஞ்ச பூதங்களுக்கும் அப் பாற்பட்டது என்பதற்காக, "வெளியில் விளைந்த பாழ்" என்று சொன்னார். பிறகு இது இட எல்லையையும் கடக் தது என்பதற்காக வெறும் பாழ்" என்று சொன்னார். இந் தப் பாட்டின் முன் பகுதியில் உருவம் உடைய பொருள் போல ஒளி, மலை, உச்சி,தேன் என்று சொன்னார். அவை நமக்கு விளங்குவதுபோல இருந்தன. ஆனால் பிற் பகுதியிலே ஒரே நுண்பொருள்களாகச் (abstract) சொல் கிறார். ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? நமக்கு விளங்க வேண்டுமென்று முதலில் உருவகமாகச் சொன்னார். அதைக் கேட்ட பிறகு நாம் அதனை, இந்திரியங்களுக்குக் கட்டுப் பட்டது, பொறிகளின் மூலமாகவே அநுபவிக்கக் கூடியது என்று எண்ணிவிடாமலிருக்கப் பிற்பகுதியில் இவ்வாறு விளக்குகிறார். அதனைப் பொறிகளின் மூலமாக அநு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/43&oldid=1725248" இலிருந்து மீள்விக்கப்பட்டது