வள்ளிகோன் உபதேசம் ஹிந்து மதம் f சமயம் நமது பாரத நாடு முழுவதும் அமைந்த ஒரு சமயத்தை ஹிந்து மதம் என்று சொல்கிறோம். நாம் சொல்கிறோம் என்று சொல்வதைக் காட்டிலும் மேல்நாட்டார் சொல்ல, நாம் சொல்கிறோம் என்று சொல்வதே பொருத்தம். அவர் கள்தாம் இந்தியா என்றும் ஹிந்து மதம் என்றும் சரித் திரத்தில் எழுதி இருக்கிறார்கள். ஹிந்து மதம் என்று ஒரு மதம் உண்டா? இந்தியா முழுமைக்கும் ஒரு உண்டா? அப்படியானால் ஹிந்து மதத்திற்குப் பொதுவான தத்துவம் என்ன இருக்கிறது? என்று சிலர் கேட்கிறார்கள். ஹிந்து மதத்திற்குப் பொதுவாக ஏதாவது இலக்கணம் உண்டா என்பதைப் பார்க்கலாம். பொதுவான இலக் கணம் கோயிலுக்குப் போய்க் கும்பிடுவது என்றால், கோயி லுக்குப் போகாத யோகிகள் ஹிந்து மதத்தில் இருக்கிறார் கள்: ஞான விசாரம் பண்ணுகின்ற முனிவர்கள் இருக்கிறார் கள். அவர்கள் கோயிலுக்குப் போவதில்லை. ஆகையால் கோயிலில் போய்க் கும்பிடுவது ஹிந்து மதத்தின் பொதுக் கொள்கை என்று சொல்ல முடியாது. அப்படியானால் விபூதி பூசுவதை ஹிந்து மத அடையாளம் என்று சொல்ல லாமா? நாமம் போடுகிறவர்கள் ஹிந்து மதத்தில் இருக் கிறார்கள். நாமம் போடுவதும் அப்படியே பொதுவான இலக்கணம் ஆகாது. வேஷ்டி கட்டாதவர்கள் ஹிந்து மதத்தினர் ஆகமாட்டார்கள் என்றால், 'பாண்ட்' போடுவது ஹிந்து மதத்திற்கு விரோதம் என்று எங்கும் சொல்ல 3.. .
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/47
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை