34 ஆனந்தத் தேன் வில்லை. காது குத்துவது ஹிந்து மதத்தின் அடையாளம் என்றால், காது குத்தாமல் பலகாலம் வாழ்கின்ற பிள்ளைகள் இருக்கிறார்கள். குழந்தைக்கு உபநயனம் செய்யும்போது காது குத்துவது என்ற வழக்கம் உள்ள குடும்பங்கள் இருக் கின்றன. ஆகவே காது குத்துவதையும் அடையாளமாகச் சொல்ல முடியாது. இவற்றை எல்லாம் பார்த்தால் ஹிந்து மதம் என்று பொதுவாகச் சொல்வது தவறு போலத் தோன்றுகிறது. அத்வைதக் கொள்கையை நிலைநாட்டிய சங்கரர் ஹிந்து மதத்தைச் சார்ந்தவர். ராமாநுஜாசாரியார் விசிஷ்டாத்வைதக் கொள்கையைப் பரப்பினவர்; அவர் ஹிந்து.மத்வாசாரியாரும் ஹிந்து சமயத்தைச் சேர்ந்தவர்; அவர் த்வைதக் கொள்கையை நாட்டில் பரப்பினார். சைவ சித்தாந்தம் இருக்கிறது. வீர சைவம் இருக்கிறது. எல்லாம் ஹிந்து மதத்தைச் சார்ந்தவையே. அவற்றில் ஒன்றை மாத் திரம் ஹிந்து மதம் என்று சொல்ல முடியாது. அரிசி சாப் பிடுகிறவர்கள் ஹிந்துக்கள் என்றால், கோதுமை சாப்பிடு கிறவர்கள் வடக்கே இருக்கிறார்கள். "இப்படி உடை, உணவு, ஆசாரம் ஆகிய எல்லாவற்றிலும் வேறுபாடு இருக் கிற இடத்தில் எப்படி ஐயா ஒரு சமயம் இருக்க முடியும்?" என்ற கேள்வி எழுகிறது. ஹிந்து மதம் என்ற பெயர் நாம் வைத்தது அல்ல. மேல்நாட்டிலிருந்து வந்தவர்கள் இந்தியாவுக்குள் முதலில். கைபர் கணவாய் வழியாக வந்தார்கள். அதைத் தாண்டிய வுடன் அவர்கள் கண்ணில் முதலில் தென்பட்டது சிந்து நதிப் பிரதேசம். அதிலிருந்து சிந்து, ஹிந்து என்று பெயர்கள் வந்தன. அங்கு இருப்பவர்கள் ஹிந்துக்கள், அவர்கள் மதம் ஹிந்து மதம் என்றாகிவிட்டது. அவர்கள் அந்தப் பெயரை இந்தியா முழுமையும் இருக்கின்ற ஒரு சமயத்தை நினைந்து வைக்கவில்லை.
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/48
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை