பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்விகோன் உபதேசம் 51 நீரைப் பக்கத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டுச் சாதம் போடுகிறாள். சாப்பிடுகிறவனுடைய உணவுப் பொருளை யும் தண்ணீர் உண்டாக்கிக் கொடுக்கிறதோடு சாப்பிடுகிற வனுக்குத் தானேயும் தனித்து உணவாகிறது. ஆகையால் மிகச் சிறப்பானது தண்ணீர் என்று அநுபவத்தில் காண் கிறோம். . சிலகாலத்திற்கு முன்னால் மேல்நாட்டிலிருந்து பெரிய விஞ்ஞானி ஒருவர் வந்தார். ஸர் ஜி. வி. ராமன் அவரிடம் திடீரென்று, "நீங்கள் அமிருதத்தைப் பார்த்திருக்கிறீர் களா?' என்று கேட்டார். அவர் சற்றே யோசனை செய்தார். ஸ்ரீ ராமன், "சுத்தமான தண்ணீர்" (Pure and simple water) என்றார். மனிதனை உயிர் வாழச் செய்வது தண்ணீர்தான். ஆகவே, "நீங்கள் அடைந்த அநுபவம் தண்ணீர் போன்றதா?" என்று கேட்டால் "நீர் அன்று" என்கிறார். மண் அன்று " சரி. உயிர்கள் உடம்பு எடுத்துப் பக்குவத்தை அடை கின்றன. உடம்புக்கு ஆதாரமாக இருப்பது பூமி. தரை என்று அதற்குப் பெயர். தரை என்பதற்குத் தாங்குவது என்று பொருள். தனக்குத் துன்பம் செய்கிறவனையும் அது தாங்குகிறது. தன்னை வெட்டுகிறவனையும் தாங்குகிறது. அகழ்வாரைத் தாங்கும் நிலம்" என்கிறார் வள்ளுவர். பூமிக்கு வசுந்தரா என்றும் ஒரு பெயர் உண்டு. வசு என்றால் செல்வம். பலவகையான செல்வங்களை அவள் தன் மடிக்குள் வைத்திருக்கிறாள். சிலர் பணத்தை கூடப் பூமியில் புதைத்து வைக்கிறார்கள். நெய்வேலியில் நிலக்கரி கிடைக்கிறது; கோலாரில் தங்கம் கிடைக்கிறது. இப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/65&oldid=1725271" இலிருந்து மீள்விக்கப்பட்டது