78 ஆனதந்த் தேன் சுழுமுனை என்று பெயர். அது இந்த ஆறு ஆதாரங்களை யும் உருவிச் செல்கின்றது. மூலாதாரத்தில் உள்ள அக் கினியை எழுப்பி மேலே ஏற்றி ஆறு ஆதாரமும் கடந்து ஸஹஸ்ராரம் வரைக்கும் செல்லும்படிச் செலுத்துவதை வாசியோகம் என்பார்கள். மூலாக்கினியை எழுப்பி ஏற் றும்போது இடையிலே குண்டலினி என்ற தடை ஒன்று உண்டு. அது சுருண்ட பாம்பு போல இருப்பது. அந்தத் தடையைப் போக்கி அதை எழுப்பி ஒட்ட வேண்டும். அப் பால் மூலக்கனலை மேலே எழுப்பி மேலுள்ள சந்திர மண்டலத்தளவும் செலுத்தினால் அங்கே உள்ள அமுதம் பொழியும். இவ்வாறு யோக நூல்கள் கூறும். இந்தக் குண்டலினி யோகத்தில் வெற்றி பெற மயில் உதவி செய்யும்; மயில் வாகனப் பெருமாளை நினைத்தால் யோகத்தில் சித்தி உண்டாகும். பாம்பை விரட்ட உத வும் மயில் குண்டலினி என்னும் பாம்பையும் எழுப்பி ஓடச் செய்யும். "வாசியாலே மூலக்கனல் வீசியே சுழன்றுவரப் பூசை பண்ணிப் பணிந்திட மாசறக்குண்டலியைவிட் டாட்டுமே- மேல் www ஓட்டுமே' என்று கோபாலகிருஷ்ண பாரதியார் பாடுகிறார். குண்ட லினி ஆகிய பாம்பை ஆட்டுவது மயில். யோகம் செய்து சித்திபெற்ற சித்தர்களுக்குத் தெய்வமாக இருப்பவன் முருகன். அவன் மயில்மேல் ஏறி வந்தால் குண்டலினி யென்னும் பாம்பு எழுந்து ஓட, வாசியோகம் நிறைவேறும். "வாசியில் ஏறி வருவாண்டி. வாசி நடத்தித் தருவாண்டி" ஒரு என்று இராமலிங்க சுவாமிகள் பாடினார். வாசி என்பது வாகனம், வாசியோகம் இரண்டுக்கும் பெயர். மயிலாகிய வாசியில் ஏறி வரும். முருகன் வாசியோகத்தை நடத்தித் தருவான். மயில் வாகனப் பெருமானைத் தியானித்தால் யோகம் கை கூடும் என்பதை அதிலிருந்து உணர்கிறோம்.
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/92
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை