பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஆனந்தத் தேன் இருக்கும். அதுபோல முருகப் பெருமானின் சந்நிதானத் திற்கு முன்னால் பெரும்பாலான இடங்களில் மயில் இருப் பதைக் காண்கிறோம். ஆனால் திருத்தணியில் யானை இருக் கிறது. காரணம் அதுவும் அவனுடைய வாகனம். சாமானி யாப் பணக்காரன் ஒருவனிடமே இரண்டு மூன்றுக்கு மேற் பட்ட கார்கள் இருக்கின்றன. முருகப் பெருமானுக்கு மாத்திரம் ஒரு வாகனம் போதுமா? ஆட்டுக்கடா வாகனம், யானை வாகனம், மயில் வாகனம் என்று அவனுக்குப் பல வாகனங்கள் உள்ளன. மூன்று மயில்கள் மயில் வாகனத்திலும் மூன்று வகை உண்டு. பிரணவ மயில் ஒன்று. மற்றொன்று இந்திர னாகிய மயில். சூர சங்கார காலத்தில் தேவர்களுடைய வாழ்வைத் திரும்பவும் பெற்றுத் தருவதற்காக முரு கன் போர் செய்தான். 'நமக்காக எம்பெருமான் போராடிக் கொண்டிருக்கிறானே; இவனுக்கு நாம் எந்த வழியில் உதவி செய்வது?' என்று இந்திரன் எண்ணினான். இறைவனை நாடி உய்வோம் என்ற அறிவுடன் ஆணவம் போய், மயில் உருவமாக மாறி அவனைப் போய்த் தாங்கிக் கொண்டான்; அவனுடைய வாகனமாக ஆனான். இந்திரனே ஒரு வகையில் மயில் போன்ற தோற்றம் உள்ளவன். அவன் உடம்பெல்லாம் கண் இருக்கும்.மயி லின் உடம்பு முழுவதும் கண்கள் இருக்கும். "ஆயிரம் கண் உடையாய்" என்று மயிலைக் கம்பர் வருணிக்கிறார். ஆயிரம் கண் என்றால் பல என்று கொள்ள வேண்டும். முருகப்பெருமானைத் தாங்கும் வாகனமாகத் தான் ஆக வேண்டுமென்று நினைத்த இந்தீரன் யானை உருவம் எடுத் தானா? குதிரை உருவம் எடுத்தானா? மயில் உருவம் எடுத் துக்கொண்டான். மயில் வேஷம் போட்டு அவனுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/94&oldid=1725300" இலிருந்து மீள்விக்கப்பட்டது