பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ஆனந்தத் தேன் மயிலின் வீரம் தால்காப்பியத்தின் உரையில் பேராசிரியர் என் னும் புலவர் முருகன் ஊர்தியாகிய மயிலைப் பற்றி ஓரிடத் தில் சொல்லுகிறார். இன்ன இன்ன சொல்லை இன்ன இன்னவற்றுக்குச் சொல்ல வேண்டும் என்ற வரையறை உண்டு. யானையின் குழந்தையைக் குட்டி என்கிறோம். மனிதக் குழந்தையை மனிதக் குட்டி என்று சொல் வோமா? அப்படி யாரும் சொல்வது இல்லை. காக்கையின் குழந்தையைக் காக்கைக் குஞ்சு என்கிறோம். குஞ்சு, சூட்டி, குழந்தை என்பன எல்லாம் இளமையுடையவற்றைக் குறிக்கின்றவையானாலும் மனி தக் குழந்தை. காக்கைக் குஞ்சு, யானைக்குட்டி என்று சொல்கிறோம்; இது மரபு. இத்தகைய மரபுகளைத் தொல் காப்பியத்தில் மரபியல் என்ற பகுதி விரிவாகச் சொல் கிறது. பறவைகளில் ஆணைச் சேவல் என்றும் பெண்ணைப் பேடை என்றும் சொல்வது மரபு. ஆண் கோழியைச் சேவல் என்கிறோம். பெண் கோழியைப் பெட்டைக் கோழி என்கிறோம். சேவல் என்று சொன்னால் வீரம் பொருந்தியது, ஆண்மை பொருந்தியது என்று பொருள் படும். மயில் அல்லாத மற்றப் பறவைகளில் ஆணைச் சேவல் என்று அழைக்கலாம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஆண் மயில் அழகாக இருக்கும்; உடல் மென்மை ஆக இருக்கும். மென்மையான ஒன்றுக்குச் சேவல் என்ற பெயர் கூடாது என்று எண்ணியிருக்கலாம். "சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மாயிருந் தூவி மயிலலங் கடையே. M. இதற்கு உரை எழுதப் புகுந்த பேராசிரியர் மயிலை

  • சேவல் என்னும் பெயரைக் கொடுப்பது, சிறகுடைய

பறவைகளோடு பொருந்தும், பெரிய கரிய தோகையையுடைய மயில் அல்லாத இடத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்தத்_தேன்_1956.pdf/96&oldid=1725302" இலிருந்து மீள்விக்கப்பட்டது