84 ஆனந்தத் தேன் அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு; அடியிடஎண் சைவரை தூள்பட்ட; அத்தூளின் வாரி திடர்பட்டதே. குறிப்பு அறிந்து போகும் குதிரையானால் குதிரைக் காரன் கடிவாளத்தை இழுத்துப் பிடிக்க வேண்டிய தில்லை; சவுக்கால் அடிக்க வேண்டியதில்லை. குதிரை முரட்டுத்தனமாக ஓடினால் கடிவாளத்தை இறுக்கிப் பிடிக் கிறான்; சவுக்கால் அடிக்கிறான். எம்பெருமான் முருகன் ஏறுகின்ற மயில் குறிப்பு அறியும் தன்மை உடையது. ஆதலால் கடிவாளத்தை இறுக்கிப் பிடிக்காமல் நெகிழ்த்துவிடுகிறான். குசை நெகிழா, வெற்றி வேலோன். (நெகிழா - நெகிழ்த்து மயிலையும் வேலையும் ஒருங்கே நினைக்கிறார் அருணகிரியார். பாட்டு மயிலைப் பற்றியது; வெற்றி வேலோன் விடும் மயி லைப் பற்றியது. வெற்றி வேலோன் என்று முருகனைக் குறிப்பிடும்போது வேலைப்பற்றிய எண்ணமும் வந்துவிடு கிறதல்லவா? வெற்றியைத் தருகின்ற வேலைத் தன் திருக் கரத்தில் உடையவன் முருகன். அவன் குசையை நெகிழ்க்க, மயில்வாகனம் வேகமாகச் செல்கிறது. அவுணர் குடர் குழம்ப. அதன் வேகத்தைக் கண்டு அசுரர்களின் குடல்கள் குழம்பின.வயிற்றில் கலக்கம் ஏற்பட்டது. நடக்கப் போகின்ற போரில் நாம் எல்லோரும் அழியும் காலம் வந்து விட்டதே என்று அசுரர்கள் மயில் வாகனப் பெருமானைப் பார்த்துக் குடல் கலங்கிப் போனார்கள். கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்து அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு.
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/98
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை