பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த ஓவியம் மாகியிருந்தது. பிறகு கொஞ்ச காணவேயில்லை. ஆறு . காலம் ராமுவைக் அவன் ம் மாதத்திற்குப் பிறகு மறுபடியும் திடீரென்று முளைத்தான். அந்தத் தடவை அவன் செய்த யோசனை கட்டாயம் அவனுக்கு அதிர்ஷ்டம் கொண்டுவரப் போகிறதென்று நான்கூட நினைத்துவிட்டேன். இங்கிருந்து எட்டு மைல் தூரத்திலுள்ள அல்லிப்பாக்கம் என் னு கிராமம் உங்களுக்குத் தெரியுமல்லவா? அந்தக் கிராமத் தைச் சேர்ந்த ஏரியில் ஒரு பெரும் பகுதியை அவன் விலைக்கு வாங்கினான். அவனுடைய மனைவியின் பெயரால் இருந்த கொஞ்சம் சொத்தை விற்று இதற்காக அவன் பணம் கொண்டு வந்திருந்தான். சென்னைப்பட்டணத்திலேயே மத்திய வகுப்பை சேர்ந்த உத்தியோகஸ்தர் குடியிருக்க இடமில்லாமல் மிகவும் திண்டாடுகிறார்களென்றும், நாளடைவில் ஜனங்கள் பட்டணத்துக்குச் சுற்றுப் புறங் களிலே வீடு கட்டிக்கொண்டு வசிக்கத் தொடங்குவார்க ளென்றும் அவன் எதிர்பார்த்து இந்தக் காரியம் செய்தான். எப்படிப்பட்ட புத்திசாலி,பாருங்கள்! அவன் எதிர்பார்த்த படிதான் நடந்தது. ஆனால் அதிர்ஷ்டந்தான் மறுபடியும் குறுக்கே நின்றது. எப்படியோ மாம்பலத்தின்மீது எல் லோருக்கும் மோகம் விழுந்துவிடவே அல்லிப்பாக்கத்தைத் திரும்பிப் பார்ப்பார் இல்லை. சென்னைப்பட்டணத்தில் மோட்டார் பஸ் விடும் யோசனை முதன் முதலில் யார் மூளையில் உதயமாயிற்று உங்களுக்குத் தெரியுமா? அந்த ரகசியத்தை இப்போது. வெளியிடுகிறேன்: என் நண்பன் ராமுவின் மூளையில் தான். ஆனால் அவனைப் பிடித்த துரதிருஷ்டம்மட்டும் விட வில்லை. ராமுவைப் பார்த்துப் மோட்டார் பஸ் வாங்கி விட்டவர்கள் அந்தக் காலத்தில் பதினாயிரம், இருபதினா யிரம் சம்பாதித்துவிட்டார்கள். ஆனால் ராமுவின் மோட் டார் பஸ் வாங்கிய இரண்டாவது மாதத்திலேயே குடை கவிழ்ந்து தான் உடைந்ததோடில்லாமல் ஒரு பெண் பிள்ளைக்கும், ஒரு குழந்தைக்கும் எமனாய் முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/11&oldid=1721395" இலிருந்து மீள்விக்கப்பட்டது