பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவசாயச் சிறப்பு! 15 செலுத்துவ அபிவிருத்தி விஷயத்தில் அவ்வளவு கவலை தில்லை. அப்படிக்கிருந்தபோதிலுங்கூட, இந்தியாவில் அன்னியத் துரைத்தனம் ஏற்பட்டபின்னர், அதற்குமுன் ரு படி நெல் காய்த்துக்கொண் டிருந்த நெற் செடிகள் இரண்டு படி காய்த்துத் தருகின்றன என்பது வெகு ஜன வாக்கு. இதற்கு முக்கிய காரணம் மேற்படி செடிகளுக்கு அதிகார வர்க்கத்தாரிடம் உள்ள 'காபரா'வே என்று சொல்லப்படுகிறது.

ஏன்? என்ன நினைக்கிறீர்கள்? இவ்வளவு அற்புதமான கட்டுரைக்கு முதற் பரிசு கிடைத்ததில் ஏதேனும் ஆச்சரிய முண்டா? மொத்தம் 97 மாணுக்கர்கள் கட்டுரை எழுதினார் கள். கட்டுரையைச் சீர் தூக்கியவர்கள் ஒரு மாஜி தாசில்தார், ஒரு ராவ் பஹதூர், ஒரு கௌரவ ஜெயில் விஸிட்டர். ஒரு விவசாய நிபுணர் ஆகியவர்கள் அடங்கிய பஞ்சாயத்தார். இவர்கள் ஒருமுகமாக முதற் பரிசுக்கு என் கட்டுரையையே சிபார்சு செய்தார்கள். ஒரு ஜெர்மன் ஸில்வர் மெடல், சர்க் கார் விவசாய இலாக்கா வெளியிடும் விவசாயப் பஞ்சாங்கங் கள் ஒன்பது, பாரி கம்பெனியாரின் விளம்பரப் படங்கள் இருபது ஆகியவை எனக்குக் கிடைத்த பரிசுகள் ஆகும். ஜெர்மன் ஸில்வர் மெடலைக் கொடுத்துப் பேரீச்சம் பழம் வாங்கலாமென்று பார்த்தேன். ஆனால் ஆனால் ஒரு களைகூட அவள் கொடுக்க மறுத்துவிடவே கோபத்தில் வீசிச் சாக் கடையில் எறிந்தேன். பஞ்சாங்கங்கள் பற்பொடி மடித்துத் தீர்ந்து போயின. விளம்பரப் படங்களை வயலில் போட்டு உழும்படி என் தமையனாருக்குத் தபாலில் அனுப்பினேன். அவர் என்ன செய்தாரோ தெரியாது. இனிமேல் என்னுடைய விவசாய அநுபவங்களைப் பற்றிக் கூற வேண்டும். நான் குடியிருக்கும் வீட்டுக்கு மேற் புறத்தில் வெற்றிடம் ஏராளமாயிருக்கிறது. சென்ற வருஷத் தில் எனக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/20&oldid=1721404" இலிருந்து மீள்விக்கப்பட்டது