விவசாயச் சிறப்பு! 19 போன்ற ஒரு வகைச் சிறிய பூச்சிகள் தெரு வீதியில் கால் வைக்க இடமில்லாமல் நிறைந்திருந்தன. ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி, வெள்ளம், சங்கம், பதுமம், மகாபதுமம் என்னும் கணக்காக அந்தப் பூச்சிகள் கிழக் கிருந்து மேற்கே நெளிந்து நெளிந்து ஆகாய விமான வேகத் தில் அதிவேகமாய்ப் போய்க்கொண்டிருந்தன. இவைகள் எல்லாம் இவ்வளவு அவசரமாய் எங்கே போகின்றன என்பதைப் பார்க்கும்பொருட்டு, காலில் செருப்புப் போட்டுக்கொண்டு கூடியவரையில் பூச்சிகளை மிதியாமல் தத்தித் தத்தி மேற்புறம் சென்றேன். அப்போது என்ன பார்த்தேன் என்று நினைக்கிறீர்கள்? 'நதிகளெல்லாம் சமுத் திரத்தை வந்தடைவது போலவும். சர்வ தேவர்களுக்குச் செய்யும் நமஸ்காரங்களெல்லாம் ஸ்ரீ கேசவனைப் போய்ச் சேருவது போலவும், எல்லாப் புறங்களிலிருந்தும் வந்து கொண்டிருந்த பூச்சிகளெல்லாம் என்னுடைய அருமைக் கத்திரிச் செடியையே குறியாகக்கொண்டு வந்தடைவதைக் கண்டேன். செடிகளில் ஓர் இலையில் ஓர் அணுவளவு பாகங் கூடக் கண்ணுக்குப் புலனாகவில்லை. எல்லாம் பூச்சிகளால் மூடப் பெற்றிருந்தன. மன உணர்ச்சியை வாய்ச் சொற் களால் விவரிக்க முடியாத சிற்சில சந்தர்ப்பங்கள் நேர்வ துண்டு. அத்தகைய தருணங்களில் இதுவும் ஒன்றாகும். • மறுநாட் காலையில் சென்று பார்த்தபோது, கத்திரிச் செடிகளில் ஓர் இலையாவது பாக்கியில்லை. ஆனால், இலைக் காம்புகள் எல்லாம் அப்படி அப்படியே நின்றன. மாட்டைப் போல் காம்புகளையும் தின்றுவிடாமல் விட்டதற்காகப் பூச்சி களுக்கு நன்றி கூறினேன். ஆனால் பெரிய மாடுமுதல் சிறு பூச்சிகள் வரையில் என்னுடைய விவசாயத்துக்கு ஏன் விரோதம் செய்ய வேண்டு மென்பது எனக்கு விளங்கவேயில்லை. சட்டென்று ஒரு யோசனை தோன் றிற்று. அப்போது விவசாய ராயல் கமிஷன் கல்கத் தாவில் விசாரணை புரிந்துகொண் டிருந்தது. அதன் தலைவர் லின்லித்தோ பிரபுவுக்குப் பின்வருமாறு ஓர் அவசரத் தந்தி
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/24
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை