30 ஆனந்த ஓவியம் எனவே, வண்டி திருவரம்பூர் ஸ்டஷேனில் நின்றதும் அந்த மனிதர் இறங்கி வந்து என் வண்டியில் ஏறி எதிர் ஆசனத்தில் உட்கார்ந்தபோது நான் சிறிதும் ஆச்சரிய மடையவில்லை. அதற்கு மாறாக அவர் வருகையை எதிர் பார்த்துப் பூரண ஆயத்தமாயிருந்தேன். இரண்டொரு முறை தொண்டையைக் கனைத்துச் சரிபடுத்திக்கொண்டு அந்த மூக்கு நீண்ட மனிதர் மெதுவாக ஆரம்பித்தார். தங்களை எங்கேயோ பார்த்த ஞாபகமிருக்கிறது, ஸார்! எங்கே யென்றுமட்டும் ஞாபகம் வரவில்லை என்றார். எனக்கும் அப்படித்தான் ஸார், தோன்றுகிறது. அது தான் யோசித்துக்கொண் டிருந்தேன். ஒரு வேளை கும்ப கோண மகாமகத்தில்" .. "பார்த்தீர்களா நினைத்தேன்! நீங்கள் வந்திருந்தீர்களல்லவா? மகாமகத்துக்கும் 'நானா? நான் கும்பகோணத்துக்குப் போனதே கிடை வாது ஆசாமி கொஞ்சம் திடுக்கிட்டுப்போனார். "பின்னே மகாமகத்தில் பார்த்ததாகச் சொன்னீர்களோ" என்றார். 'இதோ பாருங்கள்; நான் சொல்லாததைச் சொன்ன தாகக் கூறினால் என்ன செய்யட்டும்! ஒருவேளை மகாமகத் தில் என்றுதானே நான் சொன்னது?" 'எனக்கு விளங்கவில்லை; நீங்கள் மகாமகத்துக்கே வர வில்லையானால் நான் எப்படி உங்களை அங்கே 'ஒருவேளை' பார்த்திருக்க முடியும்?" "நான் வராவிட்டால் என்ன? நீங்கள் போயிருக்கலா மல்லவா?" நான் போயிருந்தால். ஒருவேளை அங்கே என் கலாம்!' 2ºº . தம்பியைப் பார்த்திருக் ஓஹோ! தெரிந்தது. தெரிந்தது! இதை முன்னமேயே சொல்லியிருக்கலாமே? "மறுபடியும் பார்த்தீர்களா? சொல்வதற்கு நீங்கள் இடம் கொடுத்தால்தானே "அதுபோகட்டும், சொல்லுங்கள்.** p ஸார்! தங்களுக்கு எந்த ஊர்
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/35
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை