எந்த ஊர் ஸார்? "சொந்த ஊர் மாயவரம். 33 "ஓஹோ ஹோ! ரொம்ப அழகாகப் போச்சு! எனக்குப் பக்கத்திலே சீயாழிதான். அப்படிச் சொல்லுங்கள்.ஐயா! மாயவரத்தில் எந்தத் தெருவோ?" "பெரிய கடைத் தெரு (அப்படி ஒரு தெரு எந்த ஊரிலும் இருந்தே தீர வேண்டுமல்லவா?) "சரிதான், சரிதான்! பெரிய கடைத் தெரு வக்கீல் சோமசுந்தரச் செட்டியார் தங்கை மகளைத்தான் என் னுடைய மாமன் மகனுக்குக் கொடுத்திருக்கிறது. செட்டி யாரை உங்களுக்குத் தெரியுமல்லவா?" ஆ! அவருடைய தகப்பனாரைக்கூடத் தெரியும்.' "யார் சொக்கலிங்கச் செட்டியாரையா? அதெப்படி இருக்கட்டும், தங்களுக்கு ஸார்! அவர் செத்துப்போய் வயது என்ன ஆகிறது...? "அடுத்த மார்கழிக்குப் பத்தொன்பது!" "பத்தொன்பதா. இருபத்தொன்பதா?" "பத்தொன்பது. "என்ன வேடிக்கை, ஐயா! தங்களுக்குக் குறைந்தது முப்பது வயதிருக்கலாமென்று யாரும் சொல்வார்களே!" வழியில் போகிறவர்கள் எது வேண்டுமானாலும் சொல்வார்கள். அதற்கு நான் என்ன செய்யட்டும்?" "தாங்கள் எந்த வருஷம் பிறந்தீர்கள்? 1805ஆம் வருஷம்?" "என்ன, என்ன, அப்படியானால் தங்களுக்கு இப்போது 125 வயதல்லவா ஆக வேண்டும்? 125இல் 19 போனால் 106 வருஷம் வித்தியாசப்படுகிறதே!" உடனே அந்த மூக்கு நீண்டவரின் கையைப் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்கினேன். "சபாஷ்! உங்களுக்கு நல்ல மூளை, ஸார். ரொம்ப நாளாக வித்தியாசத்தைக் கண்டு பிடிக்க முயற்சி செய்து வருகிறேன். நீங்கள் ஒரே நிமிஷத்தில் கண்டுபிடித்துவிட்டீர்களே!" என்றேன். ஆசாமி ஒரு நிமிஷம் என்னை ஏற இறங்கப் பார்த்தார். ஆமாம், ஸார்! இதற்கென்ன வழி? முதலில் உங்களுக்குப்
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/36
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை