4. பேச்சின்பம் சுவை பாட்டின்பம், கவியின்பம், காட்சியின்பம், யின்பம் முதலியவைகளைப்பற்றி எல்லோரும் அறிந்திருக் கிறோம். ஆனால், இதென்ன பேச்சின்பம்? புதிதாயிருக் கிறதே? ஆமாம். பெயர் புதிதுதான்; விஷயம் என்னவோ மிகப் பழசு. மேற்கண்ட இன்பங்கள் எல்லாவற்றையும் பூரணமாய் அநுபவிப்பதற்கு இன்றியமையாத சாதனமா யிருப்பது பேச்சின்பமாகும். பேச்சிலே என்ன என்ன இருக்கிறது? செயல். செயல் வேண்டும்" என்று சில பெரியோர் சொல்வார்கள். இதை அவர்கள் உண்மையாக உணர்ந்திருந்தால் இப்படிச் சொல்லியே யிருக்கமாட்டார்கள் அல்லவா? உண்மையில் செயலைவிடப் பேச்சிலேயே இன்பம் அதிகம் என்பதற்கு அவர்களுடைய மேற்படி பேச்சே போதிய அத்தாட்சி யாகும்! பெரிய விஷயம் எதற்கும் போக வேண்டாம். கேவலம் சர்க்கரைப் பொங்கல் அல்லது உளுந்து வடையை எடுத்துக் கொள்வோம். இவைகளைப்பற்றிப் பேசும்போது எவ்வளவு ருசியாயிருக்கிறது? சீரகச் சம்பா அரிசியைப் பாலில் வேக வைத்து, அதில் பதமாகக் காய்ச்சிய வெல்லப் பாகை விட்டு, குங்குமப் பூவையும் போட்டுக் கிளறினால், அடடா! நாவில் ஜலம் சொட்டுகிறது. உளுந்தை வழுமூணாக அரைத்து, இஞ்சியும் பச்சை மிளகாயும் வெங்காயமும் பொடிப் பொடியாக நறுக்கிப்போட்டு வெண்ணெய் காய்ச்சின நெய்யில் கையகலம் கேட்பானேன்? பன்னிரண்டு வடையை முறித்துத் தள்ளி விடலாமென்று தோன்றுகிறது. வடை தட்டினால் உண்மையாகவே, சர்க்கரைப் பொங்கலும், வடையும் செய்து வைத்துக்கொண்டு சாப்பிடத் தொடங்குங்கள்.
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/41
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை