பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேச்சின்பம் 37 வாய்ப் பொங்கலிலும். பேச்சு வடையிலும் இருந்த ருசி யில்லை என்பதைக் காண்பீர்கள். சர்க்கரைப் பொங்கலில் குட்டிச் சாமி ஒன்றிருந்து ஒரு பல்லை இலேசாக மூளி செய்துவிடுகிறது. வடையில் ஒளிந்திருந்த கடிபட்ட பச்சை மிளகாய்த் துண்டு, மனிதனையும் படைத்து மிளகாயையும் கூடப் படைத்த முட்டாள் பிரம்மனுக்குத் திட்டு வாங்கி வைக்கிறது! அன்றியும், வாய்ப் பொங்கல் கிளறும்போதும், வாய் வடை தட்டும்போதும் எவ்வித இடையூறும் எதிர்ப்படுவ தில்லை. அரிசியைப் பாலில் வேக வைப்பதற்கோ வெண் ணெய் காய்ச்சின நெய்யில் வடை தட்டுவதற்கோ ஆட்சேபம் எதுவும் தோன்றுவதில்லை. ஆனால், உண்மையில் அவை களைச் செய்யத் தொடங்கும்போது, பால்காரர்களின் அநியாயம், வெண்ணெய் காய்ச்சின நெய்யின் அருமை, பாங்கிக் கணக்கின் நிலைமை, மகசூல் கம்மி, வரிகளின் உயர்வு, சர்க்கார் சிக்கனம், சம்பளப் பிடித்தம், அஜீரணத் தின் உபத்திரவம், டாக்டர்களின் தொல்லை, கீதையின் உப தேசம், இயற்கையுணவின் மேன்மை முதலிய இவ்வளவு தடைகளும் வந்து குறுக்கிடுகின்றன. பேச்சுக்கும் செயலுக்கு முள்ள வேற்றுமையைப் பாருங்கள். பேச்சின் பெருமையை இன்னும் நன்கு அறிய வேண்டு மானால் குழந்தைகளிடம் போக வேண்டும். குழந்தையின் மழலைச் சொல்லில் தாயார் இன்புறுவதை நான் இங்கே குறிப்பிடவில்லை. அதைப் பேச்சின்பம்' என்று சொல்லக் கூடாது. குழறலின்பம்' அல்லது 'உளறலின்பம்' என்று வேண்டுமானால் சொல்லலாம். சிறு பிள்ளைகளுக்குள் ஒரு வருக்கொருவர் மனஸ்தாபம் வந்தால், அவர்கள் கொடுக் கும் பெரிய தண்டனை என்ன? 'உன்னோடு பேசுவதில்லை. போ' என்பதுதான். சிநேகத்துக்கு அடிப்படை பேச்சு. பேச்சு இல்லாவிட்டால் சிநேகமில்லை. மெளனத்தின்

பெருமையைப்பற்றிப் பெரியோர் யலர் சொல்லியிருக்கிறார்கள். 'மெளனம் கலகம் நாஸ்தி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/42&oldid=1721426" இலிருந்து மீள்விக்கப்பட்டது