பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேச்சின்பம் மூதாட்டி கூறினாள்; ஆயினும் இந்த விஷயத்தை எடுத்துச் சொல்வதற்காக அந்தப் பாட்டி ஊர் ஊராய் மக்கள் இருப் பிடம் தேடிச் சென்றதாக அறிகிறோம்.

சுமார் இரண்டு வருஷங்களுக்கு முன்பு ஒரு முறை பத்து ரூபாய் செலவில் ஐந்து நிமிஷம் தேவ பதவி பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. 'கராச்சி காங்கிரஸுக் குப் போனேன்; அங்கே ஆகாய விமானம் ஏறினேன்' என்று எப்பொழுதுமே சொல்லிக்கொண் டிருக்கலாமே என்பதை உத்தேசித்து மேற்படி காரியத்திற்குத் துணிந்தேன். மோனோ பிளேன்' எனப்படும் அச் சிறு விமானத்தில் விமான ஓட்டியைத் தவிர ஒருவர்தான் உட்காரலாம். முன்னும் பின்னுமாக அதில் இரண்டு சிறு குழிகள் இருந்த தன. முன் குழியில் நானும், பின் குழியில் விமான ஒட்டியும் உட்கார்ந்தோம். நடுவில் மறைப்பு இருந்தபடியால் உட்கார்ந்தபடி திரும்பிப் பார்த்தால் அவன் முகம் எனக்குத் தெரியாது. விமானம் பூமியிலிருந்து கிளம்பித் தாவித் தாவி ஆகா யத்தில் எழும்பலாயிற்று. ஒவ்வொரு தடவை அது தாவிய போதும் ஒரு முறை செத்துப் பிழைத்ததாக நினைத்தேன். ஆனால், சுமார் 300 கஜ உயரம் கிளம்பிய பிறகு விமானம் நேராகப் பறக்கத் தொடங்கியதும், ஆகா! இந்த ஆனந் தத்தைச் சொல்லி அனுபவிக்கப் பக்கத்தில் ஒருவருமில்லையே யென்ற துக்கம் உண்டாயிற்று. கடற்கரை மைதானத்திலிருந்து கிளம்பிய ஆகாய விமானம் சுமார் ஐந்து மைல் தூரம் பறந்து காங்கிரஸ் நகருக்கு மேலாக வந்தது. அந்த அற்புதக் காட்சியை நான் கண் கொட்டாமல் பார்த்துக்கொண் டிருந்தபோது, தலை மீது பட் என்று ஓர் அடி விழுந்தது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஒரு கைமட்டும் தெரிந்தது. அது விமான ஓட்டியின் கையென்று சுலபமாகத் தெரிந்துகொண்டேன். அந்தக் கை கீழே சுட்டுக் காட்டியதிலிருந்து, காங்கிரஸ் நகரைப் பார்க்கும்படி அவன் எனக்குச் சொல்கிறான் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/44&oldid=1721428" இலிருந்து மீள்விக்கப்பட்டது