பேச்சின்பம் 41 வாணர்களாகவும். ஓவியக் கலைஞராகவும், பேச்சுக் கலைஞ ராகவும் பிறக்கின்றனர். பயிற்சியின்றி இயற்கையாகவே இவர்கள் இத் துறைகளில் மேன்மையடைகின்றனர். நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கோ, பயிற்சியின்றி எது வும் கைகூடாது. இத்தகையவர்களுக்கு உபயோகமாகும் பொருட்டு, பேச்சின்பத்தைப் பூரணமாய் அநுபலித்தற்குரிய சில யோசனைகளைச் சொல்லப் போகிறேன். பேச்சின்பத்திற்கு முதலாவது இன்றியமையாத சாதனம் என்னவென்றால், உங்களுடன் பேசுவதற்குத் தயா ராயிருக்கும் மனிதர்கள்தான். தனக்குத்தானே சம்பா ஷித்துக்கொள்வதில் இன்பமில்லையென்று நான் சொல்ல வில்லை. ஆனால், அத்தகையவர்கள் விரைவில் சென்னை கீழ்ப் பாக்கத்தில் உள்ள பிரசித்தமான சர்க்கார் விடுதிக்குப் போய்ச் சேர நேரிடும். இந்த விடுதியில்மட்டும், தனக்குத் தானே பேசிக்கொள்ள எல்லோருக்கும் பூரண பாத்யதை உண்டு. மற்ற இடங்களில் சகோதர மனிதர்களுடனே சம்பாஷிப்பதுதான் மரபு. சகோதர மனிதர்களிலுங்கூட நாம் நினைத்தவர்களோ டெல்லாம் பேச முடியாது. உதாரணமாக, முஸோலினிப் பெரியாருடனும், மகாத்மா சர்ச்சிலுடனும், ஸ்ரீமான் ஹிட்லர்ஜியுடனும், திருவாளர் ரூஸ்வெல்ட்டுடனும் அநேக விஷயங்கள் நமக்குப் பேசுவதற்கு இருக்கலாம். ஆனால், அவர் கள் நம்முடன் பேச வருவார்களா? ஒரு நாளும் முடியாத காரியம். அவர்கள் பேசாமல் நாம்மட்டும் ஒரு தரப்பான சம்பாஷணை நடத்துவதும் உசிதமன்று. இந்தப் பாத்தியதை பத்திரிகாசிரியர்களுக்குத்தான் உண்டு. 'அடே சர்ச்சிலே!' 'ஓ மாக்டனால்டே!', 'ஏஹிண்டன்பர்க்கே!', 'டேய்! சுண்டூர் ராஜாவே!" என்றெல்லாம் பத்திரிகாசிரியர்கள் கூப்பிட்டு எதிரிகள் பதில் சொல்ல இடமின்றி ஒருதரப்பாகப் பேசிக் கொண்டு போகலாம். சாதாரண ஜனங்களுக்கு எடுத்ததல்ல. இது
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/46
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை