42 ஆனந்த ஓவியம் அது போலவே, அடுத்தாத்துச் சேஷிப் பாட்டியும், எதிர் வீட்டு இருமல் தாத்தாவும் இரவு பகல் இருபத்து நான்கு மணி நேரமும் உங்களுடன் சம்பாஷிக்க விரும்ப லாம். ஆனால், உங்களுக்கு அது விருப்பமாயிராது. ஆகவே, நாம் சம்பாஷிப்பதற்குரிய மனிதர்கள் யார் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இப்பொழுது தான், பேச்சி லும் எந்த விஷயத்தைப்பற்றிய பேச்சில் உங்களுக்குப் பிரியம் அதிகம் என்னும் கேள்வி எழுகின்றது. அதே வித மான ருசியுள்ள மனிதர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரே ஒரு விஷயத்தைப்பற்றிய பேச்சுமட்டும் எல்லோ ருக்கும் சமமாக ருசிப்பதாகும். இதுதான் சாப்பாட்டை யும் சிற்றுண்டியையும்பற்றிய பேச்சு. மகாத்மாக்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரையில், பரம பாகவதர்கள் முதல் உல்காயதர்கள் வரையில் ஸ்திரீகள், புருஷர்கள், வாலிபர்கள், வயோதிகர்கள் அனைவருக்கும் ருசிகரமான விஷயம் பிரஸாத மகிமைதான். இங்கே மகாத்மாவின் பெயரை நான் இழுத்ததன் பொருட்டுக் கோபமாயிருக் கிறதா? அவர் தமது சுயசரிதம், நான்காம் பாகம், இருபத் தேழாம் அத்தியாயத்தில் சொல்லியிருப்பதைக் கேளுங் கள்: 'உபவாசத்திலும் வேறு உணவுப் பரிசோதனைகளிலும் மிஸ்டர் காலன்பாக் எப்போதும் என்னுடன் இருந்தார். உணவு மாறுதல்களைப்பற்றி அடிக்கடி வாதம் செய்தோம். எப்போதும் பழைய உணவைவிடப் புதிய உணவில் அதிகச் சுவை அநுபவித்தோம். உணவுச் சுவைகளைப்பற்றிய பேச்சுக் கள் அக்காலத்தில் சந்தோஷகரமாயிருந்தன. அவை அநுசித மென்று அப்போது எனக்குத் தோன்றவில்லை.' ஏன்? உணவைப்பற்றிய பேச்சு மகாத்மாவுக்கே ஒரு காலத்தில் சந்தோஷம் அளித்ததென்றால் ..? எனினும், அவர் அநுசிதம் என்று சொல்கிறபடியால் இப்போதைக்கு அதை விடுத்து வேறு விஷயங்களுக்குப் போவோம்.
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/47
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை