பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த ஓவியம் இரட்டை ஆஸை அடித்து என்ன சொல்கிறாய் என்றேன். என்று சுவாரஸ்யமாய்ப் பேசிக்கொண் டிருப்பார்கள். சங்கீதப் பிரிய கோஷ்டிகளில், 'என்னதான் சொல்லு? கதையென்றால் பஞ்சாபகேச பாகவதர் பண்ணணும். கேட்கணும். இப்போ கதை பண்ணுகிறவர்களெல்லாம் வெறுந் தளுக்குத்தான்" என்றும்,"அன்று தக்ஷிணாமூர்த்தி கஞ்சிரா வாசித்தார். அடடா! தேவதுந்துபி என்றால் அது என்றும், "இந்த ஸி. ஸி.ஆர். சீனிவாசய்யங்கார் வளைச்சு வளைச்சு எழுதுகிறாரே, சங்கீதத்தைப் பத்தி இவருக்கு என்ன தெரியும்?" என்றும் இது போன்ற பேச்சுக் கள் நடந்துகொண் டிருக்கும்? தான்"

கிரிக்கெட் அபிமானிகள். ரஞ்சி, நாயுடு, படோடி முதலிய திருநாமங்களையும், சினிமாப் பிரேமிகள் சார்லி நெவாரோ, பெயர்பாங்ஸ், பிக்போர்டு, கோஹர் முதலிய பெயர்களையும் ஜபம் செய்துகொண் டிருப்பார்கள். இந்தக் குரியதைத் கோஷ்டிகளில், அவரவர்களும் தத்தமக் தேர்ந்துகொள்ளவேண்டும். இடமில்லாத இடத்துக்குப் போய்ச் சேர்ந்தால் ஆபத்துத்தான். உதா ரணமாக, நீங்கள் இலக்கிய கோஷ்டியைச் சேர்ந்தவரென்று வைத்துக்கொள்வோம். கலிங்கத்துப் பரணியின் கவிதை இன்பத்தில் நீங்கள் கழுத்துவரை இறங்கி நீந்திக்கொண் டிருக்கும்போது, திடீரென்று ஒருவர்,"ஏன், ஸார்! மலையாளத்திலே மிளகு என்ன விலை?" என்று கேட்டால் உங்களுக்குக் கோபம் வருமா வராதா? பேச்சின்பத்தின் முக்கியமான முதல் விதியை இப்போது அறிந்துகொண்டுவிட்டீர்கள். மற்ற விதிகளை இன்னொரு சமயம் பார்த்துக்கொள்ளலாம். என் விதிகளின் உதவி யில்லாமலே பேச்சின்பத்தை நீங்கள் அனுபவிப்பதாயிருந் தாலும், எனக்குச் சம்மதந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/49&oldid=1721433" இலிருந்து மீள்விக்கப்பட்டது