பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் தெரியுமா? நான்தான்! 55 படவோ போகிறார்கள்.) உன் மனைவி, 'நன்றாயில்லை யென்று சொன்னால் எழுதியதைச் சங்கோசப்படாமல் கிழித் துப் குப்பைத் தொட்டியில் போட்டுவிடு. உன் வீட்டுக் குப்பைத் தொட்டியைவிடப் பத்திரிகாலயத்தின் குப்பைத் தொட்டி எந்த விஷயத்தில் ஒசத்தி என்று கேட்கிறேன். ஒன்றிலுமில்லை. உன் மனைவி நன்றாயிருக்கிறது என்று சொல்லி விட்டால், இரண்டில் ஒன்று நிச்சயமாகக் கொள்ளலாம்: ஒன்று, கட்டுரை உண்மையில் நன்றாயிருக்க வேண்டும்; அல்லது உன்னிடம் அவளுக்குள்ள காதலின் புதுமை இன் னும் குறையாமல் இருக்கவேண்டும். 'முதலில் கதை எழுதலாமா? கட்டுரை எழுதலாமா?: கதை எழுதுவதைவிடக் கட்டுரை எழுதுவதுதான் நல்லது என்பது என்னுடைய அபிப்பிராயம். ஏனென்றால், கதை எழுதுவது கஷ்டம். கதை எழுதுவதற்கு முதலாவது கதை ஒன்று வேண்டும். அது கிடைப்பது இலேசல்ல. பிறகு அதை வைத்துக்கொண்டு சுவாரஸ்யமாக எழுத வேண்டும். கொஞ்சம் காது, மூக்கு வைக்கலாமே தவிர, கதையின் மத்திய சம்பவத்தைவிட்டு அதிக தூரம் போகமுடியாது. இன்னொரு பெரிய தொந்தரவு இருக்கிறது. கதையென்றால், நன்றாயிருக்கிறது. இல்லை' என்பதாகச் சுலபமாய்ப் பத்திரி காசிரியர் தீர்மானித்து விடுவார். பத்திரிகாசிரியர்மீது பழி வாங்கும் விருப்பம் உனக்கிருந்தால் கட்டுரை எழுதுவதுதான் நல்லது. அது சுலபமுங்கூட கட்டுரை எழுதுவதற்கு வரம்பு ஒன்று வைத்துக்கொள் வது அவசியம் இல்லை. எதிலேயோ பிடித்து, எதிலேயோ முடிக்கலாம். கட்டுரையின் தலைப்புக்கும், கட்டுரையின் விஷயத்திற்கும் சம்பந்தமிருக்கவேண்டிய அவசியமில்லை. இந்தச் சம்பந்தம் எவ்வளவுக்குக் குறைவாயிருக்கிறதோ, அவ்வளவுக்கு நன்றாயிருப்பதாய் ஜனங்கள் எண்ணிக்கொள் வார்கள். அத்தகைய கட்டுரைகளைப் பார்க்கும் பத்திரிகாசிரி யர்களும் கொஞ்ச தூரம் படிப்பதற்குள் குழப்பமடைந்து விடுவார்கள். அதைப் படிக்கும் தொல்லையைவிடப் பிரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/52&oldid=1721436" இலிருந்து மீள்விக்கப்பட்டது