பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஆனந்த ஓவியம் ரித்து விடுவது நல்லதென்று தீர்மானித்து விடுவார்கள்! 'புனை பெயர் அவசியமா? சொந்தப் பெயரே போட்டுக் கொள்ளலாமா?": தம்பி ! தர்ம சங்கடம் என்று கேள்விப்பட் டிருக்கிறாயா? அப்படி ஒரு நிலைமை உண்டானால் அது இது தான். இரண்டு தரப்பிலும் சாதக பாதகங்கள் அவ்வளவு நிரவலாயிருக்கின்றன. து சாதாரணமாய், உன்னைப் போல் பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பிக்கிறவர்கள் எல்லோரும் முதலில் புனை பெய ருடன்தான் ஆரம்பிக்கிறார்கள். ஏன்? முதலாவது அவர் களுக்குத் தங்களிடம் நம்பிக்கையில்லை. எழுதியது நன்றா யிருக்குமோ இல்லையோ என்று சந்தேகம். இரண்டாவது, பத்திரிகாசிரியர்களிடம் நம்பிக்கையில்லை. கட்டுரை நன்றா யில்லாதிருந்தபோதிலும் அவர்கள் இடத்தை நிரப்புவதற் காக வெளியிட்டுவிடுவார்களோ என்ற பயம். மூன்றாவது. தங்களைச் சுற்றியுள்ள பந்துக்கள், சிநேகிதர்களிடம் நம்பிக்கையில்லை. சொந்தப் பெயருடன் கட்டுரை வந்து விட்டால், அவர்கள் அசூயை நோக்குடனே அதைப் பார்ப் பார்கள் என்றும், நன்றாயிருந்தாலும் சொல்லமாட்டார்க ளென்றும் யோசனை. ஆனால், புனை பெயரில்மட்டும் தொல்லைகள் இல்லையென் கிறாயா? நிச்சயமாய் உண்டு, உன் கட்டுரை புனைபெயருடன் வெளியாகி விடுகிறதென்று வைத்துக்கொள். அதைப் பார்த்தவுடன் உன் மனம் துடிதுடிக்கிறது. அந்தச் சந்தோ ஷத்தை எல்லாரிடமும் சொல்லவேண்டுமென்று தவிக் கிறாய். முதலில் உன் சிநேகிதனிடம் அவசரமாய்ச் சென்று, ராமு, விகடனில் 'முந்திரிக்கொட்டை எழுதியிருக்கிற கட்டுரையைப் படித்தாயா? கேட்கிறாய். "ஆமாண்டா, போடா! எவன் எவனோ எழுதுகிறதையெல் லாம் யார் படித்துக்கொண் டிருக்கிறது? என்று அவன் சொல்கிறான். அப்போது உனக்கு எப்படி எப்படி இருக்கும்? அவனைப் படிக்கச் செய்யவேண்டுமானால் முந்திரிக்கொட்டை யார் தெரியுமா? நான்தான்!" என்று தெரிவிக்க வேண்டிய என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/53&oldid=1721437" இலிருந்து மீள்விக்கப்பட்டது