பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+60 ஆனந்த ஓவியம் எல்லாரையும் போலவே பத்திரிகாசிரியர்களும் கர்வம் பிடித்தவர்கள். தங்களுடைய வேலைக்குப் பிறர் யோசனை சொல்வதென்றாலே அவர்களுக்குப் பிடிப்பதில்லை. மேற்கண்ட விதி முறைகளை எல்லாம் அநுசரித்து நடந்தும், 'பொல்லாத பத்திரிகாசிரியர்கள் கட்டுரைகளைப் பிர சுரிக்காவிட்டால் என்ன செய்வது?' என்று கேட்பாயானால், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சிசுபாலனுடைய நூறு குற்றங் களைப் பொறுத்ததைப்போல, நீயும் நூறு கட்டுரைகள் பிரசுரிக்கப்படாமல் போகும் வரையில் பொறுமையுடன் அனுப்பிக்கொண்டிரு. அதற்கும் பிறகு அவர்களைப் பழி வாங்குவதற்குப் பின்வரும் இரண்டு முறைகளில் ஒன்றைக் கைாளயலாம்: (1) நீயே சொந்தப் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்து விடு. அல்லது, (2) 'பத்திரிகைகளுக்கு எழுதுவதில் வெற்றி பெறுவது எப்படி?' என்ற பெயருடன் ஒரு புத்தகம் எழுதிப் பிரசுரித்து விடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/57&oldid=1721441" இலிருந்து மீள்விக்கப்பட்டது