பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அரசியல் பரீட்சை செல்வச் சிரஞ்சீவித் தம்பி சோணாசலத்துக்குச் சர்வா பீஷ்டமும் சித்திக்கும்படியாக ஆசீர்வாதம். உனது அருமை மிக்க கடிதம் கிடைத்தது. உன்னுடைய சங்கடம் என்ன என்பதை அறிந்துகொண்டேன். சர்க்கார் பரீட்சைகளில் மாணாக்கர்கள் அரசியல் விஷ யங்களைப்பற்றித் தாறுமாறான அபிப்பிராயத்தைத் தெரி வித்திருப்பதாகவும், இத்தகைய பதில்கள் அளிக்கும் மாணாக் கர்களின் பள்ளிக்கூடங்களுக்குச் சர்க்கார் 'கிரான் டில் மண் விழுந்து விடுமென்றும் கல்வி இலாக்கா டைரக்டர் சுற் றறிக்கை விட்டிருப்பது உண்மைதான். கல்வி மந்திரியும் சட்ட சபையில் மேற்படி சுற்றறிக்கையை ஆதரித்து விட் டார். "அரசியல் சம்பந்தமான கேள்விகளைக் கேட்காம லேயே இருந்துவிடலாமே?" என்று ஒரு மெம்பர் சொன்ன தையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. கேள்வி கேட்கத் தான்படும்; பதில்கள் அளித்துத்தான் தீர வேண்டும் என்று சொல்லிவிட்டார். ஆகையால் உனக்கும், உனக்குக் கல்வி அளிக்கும் பள்ளிக் கூடத்துக்கும் ஆபத்தைத் தேடிக்கொள்ளாதிருக்க விரும் பினாயானால், பரீட்சைகளில் அரசியல் சம்பந்தமான கேள்வி களுக்குத் தகுந்தபடி பதில் சொல்ல உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆகவே, உனக்கும் உன்னைப் போன்ற மாணாக் கர்களுக்கும் உபயோகமாகும்படியாக எனக்குத் தெரிந்த வரையில், அரசியல் சம்பந்தமான சில உத்தேசக் கேள்வி களையும் பதில்களையும் இங்கே வெளியிடுகிறேன். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதுமல்லவா? இந்த உதா ரணக் கேள்விகளையும், பதில்களையும் வைத்துக்கொண்டு, அப்புறம் நீ உன் சமயோசித புத்தியைக் கொண்டு 100க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/58&oldid=1721442" இலிருந்து மீள்விக்கப்பட்டது