பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஆனந்த ஓவியம் (4) டாக்டர் மரியன், தொண்டையில் டான்ஸில் இருக்கிறது. ஒரு மாதம் மருந்து போட்டுக்கொண்ட பிறகு ஆபரேஷன் செய்துகொள்ள வாரும்' என்றார். அச்சமயம் வைத்திய கலாசாலை மாணவிகளும் மாணவர் களும் என் தொண்டையைப் பார்த்து 'டான்ஸில்' எப்படி யிருக்குமென்று தெரிந்துகொண்டார்கள். று (5) எனது நண்பரான எம்.பி.பி.எஸ். ஒருவரிடம் மேற்கண்ட விவரங்களைச் சொன்னேன். அவர் தொண்டையைப் பார்த்துவிட்டு, 'உமக்கு டான்ஸில் இருக்கிறதென்று எந்த ம ன் சொன்னது?' என்றார். மெதுவாக என் தொண்டையையும் மூக்கையும் டாக்டர் களிடமிருந்து தப்புவித்துக்கொண்டு வந்த வழியே போய்ச் சேர்ந்தேன். மேற்கூறிய அநுபவங்களுக்கு முன்னாலும் பின்னாலும் ஜலதோஷத்துக்காக நான் செய்துகொண்ட சிகிச்சைகள் கொஞ்சமல்ல, நஞ்சமல்ல. அவைகளை அதிகமாய் விஸ் தரிக்காமல் ஜாபிதாவைமட்டும் இங்கே தருகிறேன். (1) புழுங்கலரிசி மூட்டையைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்தல். (அம்மாவின் வைத்தியம்) (2) வறட்டு அவல் சாப்பிடுதல். (பாட்டியின் வைத் தியம்) அடை (3) முறமுறவென்றிருக்கும் (அடுத்த வீட்டு அத்தையின் வைத்தியம்) சாப்பிடுதல். (4) சுடச்சுடக் காப்பி குடித்தல்.(சிநேகிதர்களின் வைத்தியம்) (5) 'ஸ்மெல்லிங் ஸால்ட் முகருதல். (டாக்டர் வைத் தியம்.) (6) யுகலிப்டிஸ் ஆயில் முகருதல். (டாக்டர் வைத் தியம்) (7) யுகலிப்டிஸ் ஆயிலைச் சர்க்கரையில் விட்டு உள்ளுக் குச் சாப்பிடுதல். (முதலில் இரண்டு துளியில் ஆரம்பித்துக் கடைசியில் ஒரு சின்னப் புட்டியை அப்படியே சாப்பிடுகிற வரைக்கும் வந்துவிட்டேன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/65&oldid=1721449" இலிருந்து மீள்விக்கப்பட்டது