பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியாதிக்கு ஸ்நானம் 71 சிகிச்சை சம்பந்தமாக என்னைவிடத் தெரியாதவர் ஒருவர் உண்டு என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டி வந்தது தான். ஸ்ரீமான் டி. கே. சிதம்பரநாத முதலியார் அவர்களைப் பற்றி 'விகடன்' நேயர்கள் ஏற்கெனவே நன்கறிவார்கள். சென்ற வருஷம் மழைக் காலத்தில் ஒரு நாள் அவருக்கு உடம்பு சுரமென்றும் படுத்த படுக்கையாயிருக்கிறாரென்றும் கேள்விப்பட்டதன்மேல், அவரைப் பார்க்கச் சென்றிருந் தேன். அவர் வீடு அடைந்ததும் நான் கண்ட காட்சி அதைக் குறிப்பிடத் 'திகைப்பு', 'பிரமிப்பு' என்பனவெல்லாம் சரியான வார்த்தைகளல்ல. அப்போது மழை 'சோ' வென்று பெய்துகொண் டிருந்தது. கம்பளிச் சட்டை போட்டுக் கொண்டு போயிருந்தேன் நான். ஆனால்,சுரமாய்க் கிடப்ப வர் என்று நான் கேள்விப்பட்ட கனவான் செய்ததென்ன?' முற்றத்தின் மூலையில், மாடியில் பெய்த மழை ஜலம் கொட கொடவென்று தாரையாய்க் கொட்டிக்கொண் டிருந்தது. அந்தத் தாரையில் அவர் சாவதானமாக உட்கார்ந்து ஸ்நானம் செய்துகொண் டிருந்தார்! ஸ்நானம் முடிந்து வந்ததும், உங்களுக்கு சுரம் என்று சொன்னார்களே!" என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். .. 'ஆமாம்; சுரந்தான். நேற்று 104 டிகிரி இருந்தது. இன்று 102 டிகிரி இருக்கிறது” என்றார். .. குளிர்ந்த ஜல குறைந்திருக் “பின், அதற்குள் பச்சை ஜலத்தில் .. "ஆமாம், சுரத்துக்கு இது சிகிச்சை. ஸ்நானத்தினால் தான் நேற்றைவிட இன்று கிறது. நாளைக்குப் பூராவும் சொஸ்தமாகிவிடும்” என்றார். பிறகு, தமது 'மலேரியா' சுரத்தின் கதையை ஆரம் பித்தார். பதினைந்து வருஷ காலம் மலேரியாவினால் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், எவ்வளவோ சிகிச்சைகள் செய்தும் பயனில்லையென்றும், கடைசியாகக் குளிர்ந்த ஜல ஸ்நானத் தின்மூலந்தான் மலேரியாவை வெற்றி கொண்டதாகவும் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/68&oldid=1721452" இலிருந்து மீள்விக்கப்பட்டது