பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஆனந்த ஓவியம் இவ்வளவுக்குப் பிறகு என்னுடைய பெருமையை நான் சொல்லிக் கொள்ளாமல் இருக்க முடியுமா? என்னுடைய ஜலதோஷத்தின் சரித்திரத்தை எடுத்துவிட்டேன், ஸ்ரீமான் முதலியாருடைய முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடிற்று. தம்முடைய ஜல சிகிச்சை முறையைச் சோதனை செய்வதற்கு இவ்வளவு நல்ல பாத்திரம் கிடைத்ததே என்று போல் இருக்கிறது! தான் "தினம் இரண்டு தடவை காலையிலும் மாலையிலும் குளிர்ந்த ஜலத்தில் ஸ்நானம் செய்து வாருங்கள். தோஷம் நீங்காவிட்டால், என்னைக் கேளுங்கள். ஜல "ஆள் உயிரோடிருந்தாலல்லவா உங்களைக் கண்டு கேட்பதற்கு? என்றேன். பிறகு, குளிர்ந்த ஜல ஸ்நானம் சம்பந்தமாக என்னுடைய அநுபவங்களைக் கூறினேன். டாக்டர் சங்கராச்சாரி குளிர்ந்த ஜலத்தில் குளித்துப் பழக்கம் செய்துகொள்ள வேண்டும்' என்று சொன்னா ரல்லவா? அதற்கு முன்னாலும் அது தெரியாமலில்லை. எத்தனையோ புத்தகங்களில் படித்திருக்கிறேன். எனவே 'எத்தனையோ முறை 'இன்றுமுதல் வெந்நீரின் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை' என்று தீர்மானித்துக் குளிர்ந்த ஜலத்தில் ஸ்நானம் செய்வேன். சில மணி நேரத்துக்குள் கண்டிப்பாய் ஜலதோஷம் பிடித்துவிடும். பிறகு பழையபடி வெந்நீருக்குத் திரும்புவேன். இம்மாதிரி சோதனை தொடங்கிவிட்ட முறைகளுக்குக் கணக்கே இல்லை" என்றேன்.

"ஸார்! நீங்கள் ஒரு தடவை ஸ்நானம் செய்துவிட்டு நிறுத்தியதுதான் தவறு. தொடர்ந்து மறுபடியும் மறுபடி யும் செய்திருக்க வேண்டும்' என்றார் ஸ்ரீமான் முதலியார். வேறு சந்தர்ப்பத்தில் வெறொருவர் இம்மாதிரி யோசனை சொல்லியிருந்தால் எக் காரணத்தினாலோ அவருக்கு என்னை இப் பூவுலகில் பார்த்திருக்க விருப்பமில்லையென்று தீர் மானித்திருப்பேன். ஆனால், ஸ்ரீமான் முதலியார்மீது இத் தகைய சந்தேகம் கொள்ளச் சிறிதும் இடமில்லை. மேலும் அவர் நான் பார்த்திருக்கும்போதே மறுபடியும் சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆனந்த_ஓவியம்.pdf/69&oldid=1721453" இலிருந்து மீள்விக்கப்பட்டது