பொறாமை ஆனந்த ஓவியம் ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தான். அப்போது நான் பி.எல்., பட்டம் பெற்று, வக்கீல் தொழிலில் மாதம் 50 ரூபாய்கூட வருமானமில்லாமல் கஷ்டப்பட்டுக்கொண் டிருந்தேன். எனவே, என் நண்பனில் அதிர்ஷ்டத்தைக் குறித்துச் சிறிது கொண்டேன். ஆனால், விரைவிலேயே பொறாமைக்கிடமில்லாமல் போயிற்று. ஏனென்றால், உத்தி யோக நியமன உத்தரவு நாளைக்கு வருமென்று என் நண்பன் எதிர்பார்த்துக்கொண் டிருந்த அன்று, அவனுடைய மாமா னாருக்கு வேண்டியவரான துரை காலமாகிவிட்டார். கொஞ்ச நாளைக்கெல்லாம் அவன் மாமானாருக்கே உத்தி யோகம் போய்விட்டது. பள்ளிக்கூடத்தில் படித்த காலத்திலேயே அவனுக்கு. இயந்திரங்கள் சம்பந்தமாக அதிக ஊக்கம் உண்டு. எனவே, தன்னிடமிருந்த சொத்தைப் பிடிக்கும் முயற்சி யில் ஈடுபட்டான். ஒரு வருஷம், இரண்டு வருஷமன்று, ஏழு வருஷ காலம் அதிலேயே அமிழ்ந்திருந்தான். கடைசி யாக, ஓர் ஆகாய விமானத்தைக் கட்டி முடித்து, அதை இரண்டு லட்சம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளும்படி பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எழுதினான். எவ்வளவோ ஞாபகக் கடிதங்களும், ரிஜிஸ்டர் கடிதங்களும், விண்ணப்பங் களும், கண்டனங்களும் அனுப்பிப் பார்த்தும் அரசாங் கத்தினிடமிருந்து பதில் வரவேயில்லை. . இரண்டு வருஷங் கழித்து, அவன் முதல் முதலில் அரசாங்கத்துக்கு எழுதிய கடிதம் திரும்பி வந்து சேர்ந்தது. அதன் அடியில், 'மணிக்கு 200 மைல் வேகம் போகக்கூடிய ஆகாய விமானங்கள் வந்துவிட்டபடியால் மணிக்கு 20 மைல் போகக்கூடிய விமானத்துக்குத் தற்காலம் உபயோக மில்லை' என்று எழுதியிருந்தது. ராமு இதனால் சோர்வடையவில்லை. ஆகாய விமானம். செய்த முயற்சியில் இயந்திரங்கள் சம்பந்தமான அநுபவம் தான் அதிகம் பெற்றுவிட்டதாகவும், ஜனங்களுக்கு மிகவும் உபயோகமான ஓர் இயந்திரம் செய்யப் போதாகவும் அவன் சொல்லித் தன் நண்பர்களிடமிருந்து கொஞ்சம் பணம்.
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/9
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை